அக்னிப்புரட்சி இன்றைய (15.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (15.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (15.12.2022) முக்கிய செய்திகள்.

* இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

கால்பந்து உலகக்கோப்பை - இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் அணி.

மொராக்கோவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி.

டிசம்பர் 18ம் தேதி பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும்.

* தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறி – தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதி மன்றம்!..

கன்னியாகுமரியைச் சேர்ந்த கே.லட்சுமணன், 1992ம் ஆண்டிலிருந்து தூய்மைப் பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் அவரது சேவைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர் 2012ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளார். தனது பணி ஒழுங்குபடுத்தப்படுவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு மறுத்துள்ளது.

இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, அந்த பணியாளருக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017ம் ஆண்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை 2020ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், லட்சுமணனுக்கான ஓய்வூதிய பலன்களை எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மீண்டும் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, அடிப்படையே இல்லாமல் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு , ஒரு தூய்மைப் பணியாளர், தனது ஓய்வூதிய உரிமைகளை பெறுவதற்கு ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்து வந்துள்ளார். தேவையில்லாமல் ஒரு தூய்மைப் பணியாளரின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விஷயத்தை, மேலும் மேலும் வழக்குகளுக்குள் இழுத்துச் செல்ல முற்படுகின்றனர் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.

மேலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை தள்ளுபடி செய்ததோடு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதியத்திற்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* 100 நாள் வேலை திட்டம் முறையாக நடக்கவில்லை: உயர்நீதிமன்றம் அதிருப்தி!

மதுரை: 100 நாள் வேலை திட்டம் முறையாக நடக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை
க்கு வந்தது.

அப்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு: நீதிபதிகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்ததை மனுதாரர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை.

இந்த வழக்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலரை இணைக்க உத்தரவிட்டதோடு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் அறிக்கையை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன்
வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா
அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில்விசாரணைக்கு வந்தபோது, ஈஷா அறக்கட்டளை தரப்பில், உடல், மனம், நன்னெறி மேம்படுத்தம் நிறுவனங்களை, கல்வி நிறுவனங்களாகவே கருத வேண்டும் எனவும், அதனால் ஈஷா அறக்கட்டளை கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை
எனவும் வாதிடப்பட்டது.

மத்திய அரசு தரப்பில், கல்வி போதிக்கும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல்  அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு பெற முடியும் என்பதால், ஈஷா அறக்கட்டளையும் விலக்கு கோர முடியும் எனவும் வாதிடப்பட்டது

தமிழக அரசு தரப்பில், ஈஷா அறக்கட்டளை கல்வி நிறுவனமா இல்லையா என்பதே தற்போது வரை சர்ச்சைக்குரிய கேள்வியாக உள்ளது எனவும், 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் உள்ள ஈஷா அறக்கட்டளை வளாகத்தில், 10 ஆயிரம் சதுர மீட்டர் மட்டுமே யோகா மையம் செயல்படுகிறது என்பதால் அதை மட்டுமே கல்வி நிறுவனமாக கருதலாம் என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், கட்டுமான அமைந்துள்ள மொத்தமுள்ள
4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்தில் கல்வி நிலையங்களும் அமைந்து உள்ளதால் சுற்றுச்சூழல் விலக்கு பெற உரிமை உள்ளதாகவும், யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் என்றும் கூறி, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து
உத்தரவிட்டனர்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

வரும் நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவும் மாற வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு

புயலாக மாறினால் தமிழகத்தையொட்டி கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும் இந்தியாவின் 50 நகரங்கள்:

தமிழ்நாடு: சென்னை

தில்லி: தில்லி

மகாராஷ்டிரம்: மும்பை, நாக்பூர், புணே 

மேற்கு வங்கம்: கொல்கத்தா, சிலிகுரி

உத்தரப் பிரதேசம்: வாராணசி, லக்னெள

கர்நாடகம்: பெங்களூரு

தெலங்கானா: ஹைதராபாத்

ராஜஸ்தான்: ஜெய்ப்பூர்

ஹரியாணா: பானிபட்

அசாம்: கெளஹாத்தி

கேரளம்: கொச்சி

பிகார்: பாட்னா

ஆந்திரம்: விசாகப்பட்டினம், 

குஜராத்: அகமதாபாத், காந்திநகர், பாவ்நகர், மெசானா, ராஜ்கோட், சூரத், வதோதரா, அமரெலி, போடாட், ஜுனகாத், போர்பந்தர், ஹிமத்நகர், மோடாசா, பாலன்பூர், பதான், பூஜ், ஜாம் நகர், கம்பாலியா, மோர்வி, வாத்வான், பாருச், நவ்சாரி, ராஜ்பிப்லா, வல்சாத், வியாரா, அனாந்த், சோட்டா உதய்பூர், தோஹாட், கோத்ரா, லூனாவாடா, நடியாத்.

* மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

* மூத்த குடிமக்களுக்கு ( 'NO') ரயிலில் கட்டண சலுகை இல்லை

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

பயணிகள் சேவைகளுக்காக, ரயில்வே கடந்த ஆண்டில் ₹59,000 கோடி மானியம் வழங்கியது. ஆனால், தற்போது ரயில்வேயின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை என்றார்.

* அமெரிக்காவில் காந்தி சிலை திறப்பு!
அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் காந்தியின் சிலை முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது.

நிரந்தரமாக அமைக்கப்பட்ட சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐநா செயலர் அன்டோனியோ குட்டரெஸ் திறந்துவைத்தனர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்த ஜெய்சங்கர், சர்வதேச நாடுகளை சிறந்த லட்சியங்களை நோக்கி உந்தச்செய்யும் சக்தியாக காந்தியின் இருப்பு அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

* PF வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

EPFO மூலம் PF பிடிக்கப்படும் ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக EPFOவில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, ஊழியர்களின் ஆதார் எண், பான் எண், வங்கி எண், ஓடிபி, UAN எண் போன்ற விபரங்களை கேட்டு மோசடி நடைபெற்று வருகிறது.

EPFO ஒருபோதும் இதுபோன்ற தகவல்களை கேட்காது. மக்களே ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* கேள்வி: வாரிசு அரசியல் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
உதயநிதி பதில்: இது எனக்கு ஒன்றும் புதிது அல்ல.

* புதிய மின் பகிர்மான கோட்டங்கள் தொடங்கி வைப்பு:

எரிசக்தித் துறை சார்பில் 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் தொடங்கி வைப்பு.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

* சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தினமும் பக்தர்கள் வருகை ஒரு லட்சத்தை தாண்டியதால் பாதுகாப்பு கருதி முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் எண்ணிக்கையை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று காவல்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகளுடன் பேசி பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

* மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு.

மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை பணியிடமாற்றம் செய்யவும் அமைச்சர் உத்தரவு.

* திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது

மக்கள் தன்னை பாராட்டுவதாக கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டுகிறார் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுகிறார்  -எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

* திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்ததை ஒட்டி, அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் தொடங்கியது!

இந்திய அரசியலில் நான் நீண்ட காலமாக கவனித்த பல விடயங்களுக்கு பதில் தெரியவில்லை. அவற்றில் சில: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்.

1. நேதாஜி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தும் அவர் செயல்படாமல் போனதற்குக் காரணம் என்ன?

2. நேதாஜி மீது பிரிட்டிஷார் களங்கம் கற்பித்ததை திரும்பப் பெற இந்திய அரசு முயற்சிகள் எடுக்கவில்லையே... ஏன்?

3. பகத்சிங்கை தூக்குக்கயிற்றில் இருந்து காப்பாற்ற நாம் ஏன் முயலவில்லை?

4. நாடு விடுதலை பெற்ற பின் இதுவரை ஏறத்தாழ 105 திருத்தங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் 250 ஆண்டுகளாகியும் அமெரிக்க அரசியல் சாசனத்தில் 17 - 18  திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. அதன் பக்கங்கள், பிரிவுகளும் குறைவே.அம்மாதிரியான அரசியல் சாசனம் நமக்கு ஏன் அமையவில்லை?

5. ஐநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி 70 ஆண்டுகளுக்கு முன கிடைத்தும் அதை ஏற்றுக் கொள்ள பண்டித நேருவுக்கு ஏன் தயக்கம் ஏற்பட்டது? 

6. ஆனால், பாதுகாப்பு கவுன்சில் சீனா இடம் பெற, நேரு காலத்தில் அதை ஆதரித்ததும் ஏன்?

7. கடந்த 1962 - இல் சீனப் போரில் இந்தியா இழந்த இடங்கள் அதிகம். அது எப்படி என்று பின்பு ஆராயப்பட்டதா? அந்தப் போரின் காரணமாக வி.கே.கிருஷ்ணமேனனை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து விலகச் சொன்னது போல, நாம் இழந்த இடங்களைக் குறித்து ஏன், எப்படி என்று விவாதித்தோமா?.

8. இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்திலிருந்து ராஜீவ் காந்தி  பிரதமராகும் வரை சோனியா காந்தி இந்தியாவின் பிரஜா உரிமை பெறவில்லை இத்தாலி  பிரஜை என்று மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் வினா எழுப்பினார். பிரதமர் வீட்டுப் பெண்ணாக இருந்து கொண்டு பிற நாட்டு பிரஜையாக  சோனியா காந்தி நீண்டகாலமாக வாழ்ந்தாரே… அது ஏன்?

9. இந்திய - சீனா உறவுகள் பதற்றமாக இருந்த நிலையிலும், காங்கிரஸ் கட்சி டிரஸ்டுக்கு சீன தூதரகம் 1.35 கோடி ரூபாய் ஏன் நன்கொடை கொடுத்தது? அதை காங்கிரஸ் கட்சி பெறலாமா? 

இந்திய அரசியல் களத்தில் இம்மாதிரி பல கேள்விகள் மனதில் இருக்கின்றன. பதில்கள்தாம்  பிடிபடவில்லை.இன்னும் இப்படி பல வினாக்கள் உண்டு.

- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* வரும் 31ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க அவகாசம்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி.

இதுவரை 1.5 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் உள்ளது; தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் - அமைச்சர்

* மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பாதையை சீரமைக்கும் பணி தொடக்கம்.

மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னை மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சீர் செய்யப்பட்டு நாளை மீண்டும்  திறக்கப்படும்‌ - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்.

* இந்திய அணி 404 ரன்கள் குவிப்பு:

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில், இந்திய அணி 404 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

அதிபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயாஷ் ஐயர் 86 ரன்களும் குவிப்பு.

வங்கதேசம் சார்பில் அதிபட்சமாக தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளும், மெஹிடி ஹாசன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்...!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* கோவையில் திருட்டு வழக்குகளில் நூறாவது முறையாக ஒருவர் சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த சபிர் அஹமது நேற்று பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது பிரகாசம் அருகே இவரது செல்போனை ஒரு நபர் திருடிவிட்டு பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

இதனை அறிந்த சபிர், உடனிருந்தவர்கள் உதவியுடன் தப்பிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனையடுத்து தப்பிக்க முயன்றவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(53) என்பது தெரியவந்தது.

ஏற்கெனவே இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இவர் திருட்டு வழக்கில் நூறாவது முறையாக சிறைக்கு செல்கிறார் என கூறப்படுகிறது.

* போலி நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சம் மோசடி- 2 பேர் கைது

வாலாஜா:ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 31), அஜித் (22) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 45 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகைகளை தனித்தனியாக அடகு வைத்தனர்.

இதன் மூலம் நிதி நிறுவனத்தில் இருந்து 14 லட்சம் ரூபாய் பெற்று சென்றுள்ளனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் வருடாந்திர ஆய்வு தணிக்கை செய்தனர்.

இதில் பிரகாஷ், அஜித் ஆகிய இருவரும் அடமானம் வைத்த நகைகள் போலியானது என்பதும், திட்டமிட்டு தங்க முலாம் பூசிய 45 பவுன் நகைகளை ஏமாற்றி அடகு வைத்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் அன்பரசு வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* முதல் டெஸ்ட் போட்டி: இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து வங்கதேசம் திணறல்.

சிராஜ்-3, குல்தீப்- 4 விக்கெட்டுகள் எடுத்தனர்; இந்தியா முதல் இன்னிங்சில் 404 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

* உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

கிராம ஊராட்சிகளுக்கு ₹5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ₹25 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ₹50 லட்சம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

* பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மசோதா வழிவகை.

* கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்காவிட்டால் பெற்றோர்களை விசாரிக்க உத்தரவிட நேரிடும் - சென்னை உயர்நீதிமன்றம்.

ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை; விடுதி வார்டனின் செல்போனில்தான் பேசினார் - பெற்றோர் தரப்பு

* மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது மெரினா மாற்றுத்திறனாளிகள் நடைபாதை!

சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில்
முற்றிலும் மரப்பலகைகளால் இந்த மரப்பாதையானது அமைக்கப்பட்டு கடந்த மாதம் 27ஆம் தேதி பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. கடலின் அருகே மாற்று திறனாளிகள் கடல் அலையை ரசிக்க அமைக்கபட்டு இருந்த பாதையின் ஒரு பகுதி அலைகளால் சேதம் அடைந்தது.

மேலும் அந்தப் பாதை முழுவதும் கடற்பரப்பில் இருந்த மணல் சூழ்ந்தது. இதனை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் புயலுக்கு பிறகு இது சரி செய்யப்படும் என தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து இன்று மாநகராட்சி ஊழியர்கள் அந்தப் பாதையில் சூழ்ந்திருந்த மணலை சுத்தம் செய்தனர்.

மேலும் சேதம் அடைந்த பகுதியை விடுத்து அதற்கு முன்பு வரை மட்டும் மாற்றுத்திறனாளிகள் வந்து கடலை ரசிப்பதற்காக அனுமதி அளித்துள்ளது. இந்த நடைபாதை நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

* இனி தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்.. வந்தாச்சு இவி யாத்ரா ஆப்!

இந்தியாவில் இவி சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிய யாத்ரா எனும் பிரத்தியேக மொபைல் செயலி அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மக்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி உள்ளனர்.

ஆனால் இந்தியாவில் அதிகமாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாத காரணத்தாலும், எந்த எந்த இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளது என்பதை சரியாக அடையாளம் காணமுடியாதது உள்ளிட்ட சந்தேகங்கள் மற்றும் பயத்தால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசு இவி யாத்ரா என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய ஆற்றல் சேமிப்பு தினமான நேற்று (டிசம்பர் 14ம் தேதி) இந்த செயலியை இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு துவக்கி வைத்தார். எனர்ஜி எஃபிசியன்ஸி பியூரோ சார்பில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய தளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த செயலில் பொது சார்ஜிங் மையங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் சார்ஜிங் மையங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், சார்ஜிங் மையம் இருக்கும் இடம், மையத்தில் என்ன வகையான சார்ஜர்கள் உள்ளன போன்ற தகவல்களையும், சார்ஜிங் மையத்தில் எந்த நேரம் ஸ்லாட் இருக்கிறது, சார்ஜ் ஏற்ற எவ்வளவு கட்டணம் ஆகிய தகவல்கள் இந்த ஆப்பில் பதிவேற்றிவிட்டால், பொதுமக்கள் இந்த தகவல்களை அவர்கள் செல்போன் ஆப் மூலம் தெரிந்து கொள்ளவதுமட்டுமல்லாமல், அந்த சார்ஜிங் மையத்தில் சார்ஜ் செய்ய விரும்பினால் இதே செயலியில் மக்கள் புக்கிங் செய்துகொள்ளலாம்.

சார்ஜிங் ஸ்டேஷன் வைத்திருபவர்கள் தங்கள் மையங்களில் வழங்கும் பிற சேவைகள் குறித்தும் இந்த ஆப்பில் பதிவு செய்யலாம். இதன் மூலம் சார்ஜிங் செய்ய வருபவர்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் இந்த செயலியை பயன்படுத்தி, இந்த ஆப்பை பயன்படுத்தி நீண்ட தூர பயணம் செய்பவர்கள் முன்னரே பதிவு செய்து தங்கள் காரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* சென்னையில் சர்வதேச திரைப்பட விழா துவக்கம்.

சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா இன்று துவங்கியது.

வரும் 22ம் தேதி வரை நடைபெறும் விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த விழாவில், பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று (டிச.,15) துவங்கி டிசம்பர் 22ம் தேதி வரை நடக்கிறது.

சென்னை சத்யம் திரையரங்கில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் என மொத்தம் 5 திரைகளில், ஒருநாளைக்கு 4 காட்சிகள் வீதம் 20 படங்கள் திரையிடப்படுகிறது.

பல்வேறு மொழிகளை சேர்ந்த தி மைனர், தி ஹோட்டல், தி டிவைடு உள்ளிட்ட 75 படங்களும், தமிழ் திரைப்பட பிரிவில் ஆதார், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட 12 படங்களும், இந்தியன் பனோரமா பிரிவில் கடைசி விவசாயி உள்ளிட்ட 3 தமிழ் படங்கள் என மொத்தம் 15 தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன.

மேலும் தரமணி அரசு திரைப்பட கல்லூரி மாணவர்களின் 9 குறும்படங்களும் இதில் திரையிடப்படுகின்றன.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு https://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தை சென்று பார்வையிடலாம்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* உலகக் கோப்பை கால்பந்து திருவிழா - கத்தாரை கலக்கும் அழகி!

Watch: https://youtu.be/LTfo-prksEQ

கடும் எதிர்ப்பையும் மீறி ரசிகர்களை கவர்ந்த மாடல்!

* டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு:

2023ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Assistant Conservator பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்காகத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பதவி - Assistant Conservator

காலியிடங்கள் - 09

கல்வித்தகுதி - பி.இ, பி.டெக்(அனைத்து பாடப்பிரிவுகளும்)

சம்பளம் - 56000- 2.05லட்சம் வரை

வயது வரம்பு - 21 முதல் 39 வரை

பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்

தேர்வு முறை - முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பக்கட்டணம் - 450 (எஸ்.சி, எஸ்.டி, பிடபூள்யூடி, விதவைகளுக்குக் கட்டணம் கிடையாது)

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

கடைசி நாள் - ஜனவரி 12,2023

முதன்மை தேர்வு - 30 ஏப்ரல் 2023

இணையதள முகவரி - https://www.tnpsc.gov.in/

* உலகம் முழுவதும் 52 ஆயிரம் ஸ்கிரீன்களில் 'அவதார் 2'

வீடியோ: https://youtu.be/V2tahFRQEZI

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள 'அவதார் 2' திரைப்படம் நாளை (டிசம்பர் 16ம்) தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. உலக அளவில் சுமார் 52,000 ஸ்கிரீன்களில் இப்படம் வெளியாவதன் மூலம் புதிய சாதனையைப் படைக்க உள்ளது.

இதற்கு முன்பு 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' படம்தான் அதிக தியேட்டர்களில் வெளியான படமாக இருந்தது. அந்த சாதனையை 'அவதார் 2' முறியடிக்கப் போகிறது. ஆனால், ரஷ்யாவில் மட்டும் இப்படம் வெளியாகவில்லை.

3 மணி நேரம் 12 நிமிடம் ஓட உள்ள இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் 2 டி, 3டி, ஐ மேக்ஸ் 3 டி, 3 டி ஸ்கிரீன் எக்ஸ், 4 டிஎக்ஸ் 30, ஆகிய வடிவங்களில் திரையிடப்பட உள்ளது. 'ஐ மேக்ஸ் 3 டி' வடிவில் படத்தைப் பார்க்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

* வட அமெரிக்காவில் மட்டும் முன் பதிவின் மூலம் 'அவதார் 2' 38 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் 313 கோடி ரூபாய்.

முதல் வார இறுதி வசூலாக மட்டும் இப்படம் அமெரிக்காவில் 150 மில்லியன் முதல் 175 மில்லியன் வரை வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். 2009ல் வெளிவந்த 'அவதார்' படத்தின் முதல் பாகம் முதல் வாரத்தில் 77 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்ததாம்.

அதை விட 'அவதார் 2' இரண்டு மடங்கு வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியாவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த 2022ம் ஆண்டில் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்ட படங்களில் 'கேஜிஎப் 2' படம் புரிந்த சாதனையை 'அவதார் 2' முறியடித்துள்ளதாம்.

இந்தியாவில் முதல் வார இறுதி வசூல் சுமார் 40 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

அதே சமயம், படத்தின் பிரிமீயர் காட்சியைப் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி நெகட்டிவ் கருத்துக்களைச் சொல்வதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

* சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தைவான் நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலின்படி இது 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

சீனாவின் கிழக்கே இருக்கும் தைவான் நாட்டின் தலைநகரான தைபேயிலும் நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

பெரிய நடுக்கத்திற்கு பிறகு அவ்வப்போது சிறிய நடுக்கங்களும் ஏற்பட்டதாக தைவான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிப்பு விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages