அக்னிப்புரட்சி இன்றைய (16.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.12.2022) முக்கிய செய்திகள்.

* இன்று மார்கழி பஜனை துவக்கம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் உள்ள கோவில்களில், இன்று (டிச.,16) மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

மாதங்களில் நான் மார்கழி என பெருமான் கூறுகிறார். குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் எழுந்து, நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

பக்தர்கள், கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதும்; பலர் குழுக்களாக இணைந்து, பஜனை பாடல்களை பாடி, தெருக்களில் அதிகாலை நேரத்தில் செல்வதும் வழக்கம். அதன்படி, இந்தாண்டும் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் இன்று நடக்கின்றன.

தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவிலில், மார்கழி சிறப்பு பூஜைகள் இன்று முதல் நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

TELEGRAM: t.me/agnipuratchi1

* உலகில் உள்ள இசை கலைஞர்களை சென்னைக்கு அழைக்கும் வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

* சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டுவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மார்கழி மாதம் முழுவதும் நடக்க உள்ள கச்சேரியில் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு, 4 இசைக் கச்சேரிகள் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை தொடங்கி வைத்தபின், இசைத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

தொடர்ந்து சென்னையில் 96-வது மார்கழி இசை திருவிழாவை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழர்களின் இசை வடிவம் பழமையானது. செழுமையானது. தொல்காப்பியம் காலத்திற்கு முன்பே தமிழ் இசை வடிவம் இருந்து வருகிறது.

உலகில் உள்ள இசை கலைஞர்களை சென்னைக்கு அழைக்கும் வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி உள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி, தனிமனித கொள்கையாக மாற வேண்டும். இதுதான் இன்றைய நாட்டிற்கு தேவையானதாக உள்ளது.

எந்த இசை மன்றமாக இருந்தாலும், எந்த வகை இசையாக இருந்தாலும் தமிழிற்கு முன்னுரிமை வழங்குங்கள். தமிழிசை தவறாது ஒலிக்க வேண்டும். பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும், அது தமிழ் இசையாக இருக்க வேண்டும். நான் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் எந்தவித பரபரப்பும், டென்ஷனும் இல்லாமல் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான் என்று தெரிவித்தார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* 2023ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும்

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

* நடைப்பயணத்தின் 100-வது நாளை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி:

இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தின் 100-வது நாளை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இன்று ஜெய்ப்பூரில் மேற்கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நடைப்பயணத்தின் 100-வது நாளான இன்று இதுவரை 737 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு 9 மாநிலங்களை ராகுல்காந்தி கடந்துள்ளார்.

* அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.

ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து 5,500 கி.மீ. தொலைவிற்கு சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

* தேசிய கீதம் இசைக்கும் போது பேன்டிலேயே சிறுநீர் கழித்த தெற்கு சூடான் அதிபர்!

Watch: https://twitter.com/IndiaNewsDigest/status/1603582811126235136?t=y1ayYBUk7V4omcOMbnmlaw&s=19

சாலை திட்டம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது 71 வயதான அதிபர்  சால்வடோர் கிர் சிறுநீர் கழித்தார்

* 150 ரன்களுக்கு ஆல் அவுட்:

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

குல்தீப் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் 254 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது இந்திய அணி.

சுருக்குமடி வலைக்கு தடை விதித்தது தொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் சுருக்குமடி வலை தடை சட்டத்தை அமல்படுத்த என்ன யோசனை உள்ளது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

* 10 புதிய பேருந்து நிலையங்கள் - அரசாணை

தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் - ₨115 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை

திரூப்பூரில் ₨26 கோடி மற்றும் ஓசூரில் ₨30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு

அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை

* ஆவின் பால் விலையை தொடர்ந்து நெய் விலையும் உயர்வு.

ஆவினில் நெய் ஒரு லிட்டர் ₹ 580ல் இருந்து ₹ 630 ஆகவும், 500 மி.லி ₹ 290ல் இருந்து ₹ 315 ஆகவும் உயர்வு.

200 மி.லி ₹ 130ல் இருந்து ₹ 145 ஆகவும், 100 மி.லி நெய் ₹ 70ல் இருந்து ₹ 75 ஆக உயர்வு. விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு.

* சுருக்குமடி வலைக்கு தடை விதித்தது தொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் சுருக்குமடி வலை தடை சட்டத்தை அமல்படுத்த என்ன யோசனை உள்ளது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

* மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாக 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள், சென்னை மாநகராட்சி பதிலளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

* அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய கடமை ஆளுநருக்கும் இருக்கிறது- பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.

ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது.

மதுரை திருமங்கலம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்து வந்த வினோத்குமார் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

வினோத்குமார் டென்னிஸ் வீரர். அவரது குடும்பமும் அவரது கனவுகளை நிறைவேற்ற துணை நின்றது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்ததால் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது ஆன்லைன் ரம்மி.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியது தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனாலும் அது இன்னும் தடை செய்யப்படாததால் ஒன்றரை ஆண்டுகளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவசர சட்டம் காலாவதியான பின்னர் 16 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.   ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவுக்கு  அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய கடமை ஆளுனருக்கும் இருக்கிறது.

அதை உணராமல் தற்கொலைகளை ஆளுனர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி விட்டதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைத்து அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது.

ஆளுனரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவளிக்க பா.ம.க. தயாராக இருக்கிறது.

* ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் தேதி மீண்டும் மாற்றம்- அண்ணா பல்கலைக்கழகம்.

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் தேதி மீண்டும் மாற்றபட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 24 மற்றும் 31-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19 மற்றும் 20-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* சிறந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தொடந்து முதலிடம் பிடித்தது வரும் தமிழ்நாடு- இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தகவல்.

இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் மொத்த மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கான பட்டியலில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து தமிழகம் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா டுடே நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஸ்டேட் ஆப் ஸ்டேட்ஸ் என்ற பெயரில் மாநிலங்களின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அதற்கான தரவரிசை பட்டியலை வெளியிடும்.

இந்த ஆண்டு வெளியிட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழகம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

1, 312 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இமாச்சல பிரதேசமும், 1,263 புள்ளிகளுடன் கேரளம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

பொருளாதாரம், உட்கட்டமைப்பு வசதி, மருத்துவம், விவசாயம், கல்வி, சட்டம் ஒழுங்கு, ஆளுமை, ஒருமித்த வளர்ச்சி, தொழில் முனைவு, சுற்றுலா, சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் இந்தியா டுடே நிறுவனம், பெரிய மற்றும் சிறிய மாநிலங்களை பட்டியலிட்டது.   மொத்தம் 2,080 புள்ளிகளில், தமிழ்நாடு 1,321.5 புள்ளிகளை பெற்று 5வது ஆண்டாக முதலிடத்தை பிடித்திருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தை பிடித்துள்ள குஜராத்துக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை தமிழ்நாடு எட்டிப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாடு இந்த பிரிவில் 4வது இடத்தில் இருந்தது.

முதலிடத்தை பிடித்த தெலுங்கானா 3வது இடத்திற்கு இந்த ஆண்டு தள்ளப்பட்டுள்ளது.

மருத்துவத்தில் முதலிடத்தில் கேரளா உள்ளது. கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சுகாதாரத்தில் கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.

சிறப்பான கல்வியில் கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு நான்காவது இடத்தை பிடித்துள்ளது.   சிறந்த ஆளுகை பிரிவில் கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு 6வது இடத்தை பிடித்திருக்கிறது.

சிறந்த உட்கட்டமைப்பு வசதியில் கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு 3வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் மாநிலம் 280 புள்ளிகளுக்கு 205 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.

ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தை தக்க வைத்துள்ள தமிழக அரசை வெகுவாக பாராட்டியுள்ள இந்தியா டுடே நிறுவனம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையின் கீழ் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளது.

* மெரினாவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதை மழைக்காலம் முடிந்த பிறகே திறக்கப்படும்- சென்னை மாநகராட்சி.

மாண்டஸ் புயலால் சேதமடைந்த சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடல் அலைகள் வெளியே வரும் தூரத்தை கணக்கிட்டு பாதையின் நீளம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வுமையம்.

* திட்டங்களை பெற ஆதார் அளிக்க வேண்டும்:

தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு துணை அங்கீகார முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமனம்.

மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும்- அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

* உச்சநீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறையில் சிறப்பு அமர்வு எதுவும் செயல்படாது - தலைமை நீதிபதி.

உச்சநீதிமன்ற குளிர்கால விடுமுறை நாளை தொடங்கும் நிலையில் ஜனவரி 2-ல் நீதிமன்றங்கள் மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு எந்த இழப்பீடும் கொடுக்க முடியாது - சட்டப்பேரவையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு.

* இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - வங்கதேசத்துக்கு 513 ரன்கள் இலக்கு

இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்து டிக்ளேர்.

அதிகபட்சமாக ஷுப்மன் கில் 110, புஜாரா அவுட் ஆகாமல் 102 ரன்கள் சேர்த்தனர்.

3ம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது.

* மாநிலங்கள் வாரியாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கையில், சுமார் 1 கோடி பேருடன் கேரளா முதலிடம்; மகாராஷ்டிரா 2வது இடம்

தமிழ்நாட்டில் சுமார் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்; ஒட்டுமொத்தமாக சுமார் 9.5 கோடி பாஸ்போர்ட் விநியோகம்

* மாணவர்களுக்கு எச்சரிக்கை

CBSE அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல ~https://cbsegovt.com~ என்ற பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி சமூகவிரோதிகள் பணம் பறிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், மேற்படி இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

* புகையிலை பயன்பாடு குறித்து புகார் அளிக்க

தமிழகத்தில் புகையிலை பயன்பாடு, விதிமீறல் குறித்து 104 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

சிகரெட், இதர புகையிலை பொருட்கள் தடுப்பு சட்டம் 2003-ன் படி விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

மேலும், புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த ஆலோசனைகளை பெற 1800112356 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

* 83 மருந்துகள் தரமற்றவை

நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளில் 1,487 மருந்துகள் கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 83 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதன் விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

* ஷோமெஸ்சியின் கனவை தடுப்போம்

மெஸ்சியின் உலக கோப்பை கனவை முடிந்தவரை தடுப்போம் என்று பிரான்ஸ் பயிற்சியாளர் டீடைர் டெசாம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த உலக கோப்பையில் மெஸ்சியின் ஆட்டம் அபாரமாக உள்ளது என்று பாராட்டிய அவர், முடிந்தவரை பைனலில் அவரின் ஆட்டத்தை தடுக்க தங்கள் அணி வீரர்கள் போராடுவார்கள் என்று தெரிவித்தார்.

மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலக கோப்பை என்பதால், அர்ஜென்டினா வெல்ல வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

* நாடு முழுவதுமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் 498 வழக்குகளும், தொழிலாளர்கள் தொடர்பான 1667 வழக்குகளும், 487 தேர்தல் வழக்குகளும், 2870 பொதுநல வழக்குகளும்,1295 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் 69,781 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 53,51,284 வழக்குகளும், மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் 4,28,26,777 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.65 சதவிகிதம் நிலுவை வழக்குகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, உயர்நீதிமன்றங்களில் 0.82 சதவிகிதமும், மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் 4.32 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் மக்களுக்கு எதுவும் செய்து தர முடியவில்லை - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு இன்னுமே கூட உண்மையான விடுதலை கிடைக்கவில்லை- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் ஆட்சி நடத்துவதில் சிரமம் உள்ளது- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

* அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

கடந்த 2021-ம் ஆண்டுச் சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.

ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று கடந்த மே மாதம் சட்டசபையிலேயே அறிவித்து, நம்ப வைத்து கழுத்தை அறுத்தது தி.மு.க.வின் ‘திராவிட மாடல்’ அரசு.

எனவே, தி.மு.க. அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக் காலமாகப் போராடி வரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையாகிய பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான் தெரிவித்தவேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages