அக்னிப்புரட்சி இன்றைய (24.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.12.2022) முக்கிய செய்திகள்.

* திருவரங்கம்:வைகுண்ட ஏகாதசி
பெருவிழா 22-23  பகல் பத்து இரண்டாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில்

முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன், பவழ  மாலை  அடுக்கு பதக்கங்கள், முத்து சரம், அண்ட பேரண்ட பட்சி மாலை திருவாபரணங்கள் சாற்றி சிறப்பு தரிசனத்தில்

* திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1 முதல் 11ம் தேதி வரைக்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும்- திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

* சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ₹734.91 கோடியில் மறுசீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன; மாதிரி படங்களை வெளியிட்டது தென்னக ரயில்வே!

TELEGRAM: t.me/agnipuratchi1

* தேனி: குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்து. சம்பவ இடத்தில் 7 பேர் உயிரிழப்பு, சிறுமி உட்பட 3 பேர் படுகாயம்.

* நாகை மாவட்டத்தில் ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு.

* பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே உள்ள படத்திற்கு முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

* துணை நடிகர் 'மாயி' சுந்தர் காலமானார்:

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் துணை நடிகராக நடித்திருந்த 'மாயி' சுந்தர் உடல்நலக்குறைவால் காலமானார்

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், கட்டா குஸ்தி உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்; மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

* "சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி: அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, எம்.ஜி.ஆர்-க்கு எங்கள் புகழஞ்சலி"

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டுவீட்

* சீனாவை உலுக்கிய புதிய வகை கொரோனா.

சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல்.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

* சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்

கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்படுவர் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

* திருப்பதி கோவிலுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் - திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

* ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வையுங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பை மாநில அரசுகள் உறுதி செய்து கொள்ளுமாறும் மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

புதிய வகை கொரோனா திரிபு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

* உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவுக்கான கொடி ஊர்வலம் தொடங்கப்பட்டது.

கந்தூரி கொடி ஊர்வலம் நாகையில் இருந்து கோலாகலமாக தொடங்கியது.

பேண்டு வாத்தியங்கள் இசைக்க கப்பல் வடிவ ரதத்தில் கந்தூரி கொடி கொண்டு செல்லப்படுகின்றது.

* இந்திய அணிக்கு 145 ரன்கள் இலக்கு.

2வது டெஸ்டில் இந்திய அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி.

3வது நாளான இன்று, தனது 2வது இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது வங்கதேசம்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 314 ரன்களும், வங்கதேசம் 227 ரன்களும் எடுத்திருந்தன.

* ஜே.இ.இ. தேர்வு - தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு:

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிப்பு.

கொரோனா பரவலால், 'ஆல் பாஸ்' ஆன 10ம் வகுப்பு மாணவர்களால் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் இருந்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை.

* பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

* என்ன ரூ. 17.50 கோடியா! - இது கனவா? நிஜமா?: கேமரூன் கிரீன்

கொச்சியில் நேற்று (டிசம்பர் 23) நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். இதுகுறித்து கேமரூன் கிரீன் கூறியதாவது: உண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்ததை என்னால் நம்பமுடியவில்லை. என்னையே ஒருமுறை நான் கிள்ளிப்பார்த்தேன். அந்த அளவுக்கு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

* ஐபிஎல் ஏலத்திற்கு முந்தைய நாள் சரியாக தூங்கவே இல்லை: சாம் கரன்

கொச்சியில் நேற்று (டிசம்பர் 23) நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில், இங்கிலாந்து வீரர் சாம் கரன் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். இதுகுறித்து சாம் கரன் கூறியதாவது: ஏலத்திற்கு முந்தைய நாள் நான் சரியாக தூங்கவில்லை, சற்று ஆர்வமாக இருந்தேன். எனக்கு கிடைத்தை நான் மகிழ்ச்சியுடனும், தாழ்மையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இது நான் எதிர்பார்க்காத பரிசு.

* போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம் - விளாடிமிர் புதின்

உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். விரைவில் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு ராஜதந்திர தீர்வுகளை நோக்கி பயணிப்போம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், “கடந்த 10 மாதங்களாக நடக்கும் போரால் இருநாடுகளுக்கு இடையிலான விரோதங்கள் அதிகரித்து வருவதோடு பெரிய இழப்புகளுக்கும் வழிவகுக்கும். ஆகவே பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

* சீனா, ஜப்பான், வடகொரியா, ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

* திருப்பதியில் வரும் ஜன.1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூ.300 டிக்கெட் பெரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மியான்மருக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.

மியான்மர் தனிநாடாக உருவாகி 74 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநாவில் கொண்டு வரப்பட்ட முதல் தீர்மானம் இது. 12 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட வேண்டும்; மியான்மரில் அமைதி திரும்ப வேண்டும் என்று ஐநாவில் 15 உறுப்புநாடுகள் கொண்டு வந்த பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா, சீனா. ரஷ்யா ஆகிய நாடுகள் புறக்கணித்தன. ஆட்சியாளர்களின் செயல்களால் மியான்மரில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவது கண்டனத்துக்கு உரியதென்று பல உலக நாடுகள் குரல் கொடுக்கின்றன.

* வன்முறையை தூண்ட டிரம்ப் சதி செய்தது உறுதி: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் தகவல்!..

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த அதிபர் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையை தூண்ட முன்னாள் அதிபர் டிரம்ப் சதி செய்ததாக நாடாளுமன்ற குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றார்.

இதனை அங்கீகரிப்பதற்காக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் இழுபறிக்கு பிறகு 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் நடந்தது.

அப்போது டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் அருகே நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். இதனால் டிரம்ப் வன்முறையை தூண்ட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை விசாரிக்க ``நாடாளுமன்ற ஜனவரி 6 குழு’’ அமைக்கப்பட்டது.

இந்த குழுவானது 18 மாத தீவிர விசாரணைக்கு பிறகு 814 பக்க அறிக்கையை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடந்த போது கேபிடல் கட்டிட வன்முறையை தூண்ட பல வழிகளிலும் டிரம்ப் சதி செய்தது தெளிவாக உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

* நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (டிசம்பர் 25) தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்

''கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னை - மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4,999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

* வெல்லம் ஒழுகுது.. முந்திரி பருப்பு சின்னதா இருக்குனு சொல்வாங்க! - எ.வ.வேலு

தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசாக 1000 ரூபாய், 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. மதுரையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. கரும்பு கொடுத்தால் அரைக் கரும்பு கால் கரும்பு எனவும் முந்திரி பருப்பு சிறியது, வெல்லம் உருகுகிறது என்றும் புகார் சொல்வார்கள்" என்றார்.

* ஒபாமாவிற்கு RRR, காந்தாரா படங்களை சிபாரிசு செய்த நெட்டிசன்கள்

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தான் பார்த்து ரசித்த 17 திரைப்படங்களை பட்டியலிட்டு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு பலரும் இந்தியத் திரைப்படங்களான ஆர்ஆர்ஆர் மற்றும் காந்தாராவை பார்க்குமாறு ஒபாமாவின் பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இத்திரைப்படங்களை பார்க்கவில்லை என்றால் இழப்பு உங்களுக்குத்தான் என்றும் கூறி வருகின்றனர்.

* பிஎஃப்7 வகை கொரோனா - ஒருவரிடமிருந்து 18 பேர் வரை பரவும் அபாயம்

தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா பிஎஃப்7 உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு வீரியம் அதிகம் என்பதால், பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து அவரைச் சுற்றியுள்ள 10 - 18 பேருக்கு பரவலாம் என்கின்றனர். எப்போதும் சுகாதாரத்துடன் இருக்கவும், மாஸ்க் அணியவும் அறிவுறுத்தியுள்ளனர்.

* சோம்பேறி அதிகாரிகள் 10 பேருக்கு கட்டாய ஒய்வு : அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி!..

புதுடில்லி: பணியில் அலட்சியம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு புகாரில் 10 சீனியர் அதிகாரிகளை கட்டாய ஒய்வு அளித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். உத்தரவிட்டார்.

மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் ரயில்வே அமைச்சராக இருப்பவர் அஸ்வினி வைஷ்ணவ்., இவரது கீழ் தொலை தொடர்பு துறையில் இணை செயலாளர், கூடுதல் இணை செயலாளர் அளவில் பணியாற்றி வந்த 10 சீனியர் அதிகாரிகளின் செயல்பாடுகள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து உரிய விசாரணையில் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கட்டாய ஒய்வு அளித்து உத்தரவிட்டு, மத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு பரிந்துரைத்தார்.

இதே போல ரயில்வே துறையிலும் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்கள் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் அவர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages