அக்னிப்புரட்சி இன்றைய (26.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.12.2022) முக்கிய செய்திகள்.

* 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்'

டிசம்பர் 26, 2004 அதிகாலை 12.58 மணிக்கு, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டது.

இதில் தமிழ்நாட்டில் 10,000-த்துக்கும் மேற்பட்டோரும், உலகளவில் 2 லட்சத்துக்கும் மேலானோரும் உயிரிழந்தனர்.

அவர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் இந்நாள் சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

* விடுமுறை முடிந்து ஜனவரி 1ஆம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்வு

மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு சுமார் ₹700 முதல் ₹1000 என்ற வழக்கமான கட்டணம், ஜனவரி 1ம் தேதி ₹2,900 வரை உயர்வு

* இன்று, (26.12.2022) விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள அவ்வையார் குப்பம் பகுதி அதிமுக விலிருந்து, எம்.ஆர் இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை சந்தித்து, தங்களை பாமகவில் இணைத்துக் கொண்டனர்.!

* திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 4ம் நாள்

இன்று (26.12.2022) காலை  ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம், மகரி, சந்திர ஹாரம், வயிர 3  அடுக்கு மகர கண்டிகை, அடுக்கு பதக்கங்கள், வயிர அபயஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை முன் மார்பில் சாற்றிக் கொண்டு, பின் சேவையாக - பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கு சரம் கைகளில் சாற்றி அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

* டிசம்பர் 26 - ஆழிப்பேரலை நாள்!

கடந்த 2004-ஆம் ஆண்டு  இறுதிப் பகுதி நாட்டுக்கே இருண்ட மிகுதி.  அன்றைய விடியலில் தான் மிகப் பெரும் சுனாமி லட்சக்கணக்கான மக்களின் இன்னுயிர்களைக் கவ்விச் சென்றது.

ஆழிப்பேரலை என்பது தொடர்ந்து எழும் நீர் அலைகள் ஆகும். பெருங்கடல் போன்ற நீர்நிலைகளின் பெரும் அளவிலான நீர் இடமாற்றம் அடையும் போது இவை உண்டாகின்றன. நிலவதிர்ச்சி, நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு அல்லது பெரும் விண்கல் தாக்கம் ஆகியவற்றால் துரிதமாக ஏரி அல்லது கடலின் நீர்த்தொகுதி இடமாற்றம் அடைவதனால் உருவாகும் அலைகள் பெரும்பாலும் தொலைதூரக் கரைகளைத் தாக்குகின்றன.

காரணம் எதுவாக இருந்தாலும், கடல் நீர் கடுமையாக இடப்பெயர்ச்சி அடைந்து பெருகி கரையின் மீது அழிக்கும் ஆற்றலோடு புரள்கிறது. ஆழிப்பேரலையின் விளைவு காணமுடியாதது அல்லது பேரழிவு கொண்டது ஆகும்.

1. உங்கள் தெரு கடல்மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதையும், கடற்கரை அல்லது ஆபத்தான நீர்நிலைகளில் இருந்து உங்கள் தெரு எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

2.   தப்பிச் செல்லும் வழிகளை முன்கூட்டியே திட்டமிடவும். வீடு, பள்ளி, பணியிடம் அல்லது ஆழிப்பேரலை எழும்போது இருக்கக் கூடிய வேறு இடங்கள் ஆகியவற்றின் வழிகளை நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3.   கடற்கரை வீடுகளை உயரமாக அமைக்க வேண்டும். பெரும்பாலான ஆழிப்பேரலை அலைகள் 3 மீட்டர் உயரம் கொண்டனவையே. ஆகவே வீடுகளை உயர்த்திக் கட்டும்போது பெரும்பாலான ஆழிப்பெரலைகளின் மூலம் சொத்து சேதம் அடைவதைக் குறைக்கலாம்.

4.   காலநிலை வானொலி அல்லது கடற்கரைப் பாதுகாப்பு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்கவும்.

5.   குழந்தைகள், முதியோர், போக்குவரத்து வசதி அற்றவர்கள் போன்ற தனிப்பட்ட உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள்.

நிகழ்வுகள் குறித்த தகவல்கள் நமக்கு விழிப்புணர்வை தர வேண்டும்!

TELEGRAM: t.me/agnipuratchi1

* இந்தியா - இலங்கை அட்டவணை

இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஜன.,3: 1st T20 - மும்பை - இரவு 7

ஜன.,5: 2nd T20 - புனே - இரவு 7

ஜன.,7: 3rd T20 - ராஜ்கோட் - இரவு 7

ஜன.,10: 1st ODI - கவுகாத்தி - மதியம் 2

ஜன.,12: 2nd ODI - கொல்கத்தா - மதியம் 2

ஜன.,15: 3rd ODI - திருவனந்தபுரம் - மதியம் 2

* வில் வித்தையில் இந்தியாவிற்கு தங்கம்

சார்ஜாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் கொரியாவை வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

இதன் மூலம் ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா, 5 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.

* சீக்கியர்கள் தலைப்பாகைக்கு அனுமதி

அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைத்துக்கொள்ளலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்க கடற்படைக்கு தேர்வான சீக்கியர்கள் 3 பேர் பயிற்சியில் இணைவதற்கு தலைப்பாகையுடன் அனுமதிக்க முடியாது என கடற்படை தெரிவித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சீக்கியர்கள் 3 பேரையும் தலைப்பாகை மற்றும் தாடியுடன் பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி கடற்படைக்கு உத்தரவிட்டது.

* ரூ.3250 கோடி கடன் வழக்கில் வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வி.என்.தூத்தை சிபிஐ கைது செய்துள்ளது.

முன்னதாக வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ.3250 கோடி கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக ICICI முன்னாள் தலைவர் கோச்சர் கைது செய்யப்பட்டார்.

* ஸ்பெயினில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி

ஸ்பெயினில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். வீகோ நகரின் அருகே இரவு நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் பாய்ந்தது.

அருகில் இருந்தவர்களின் தகவலையடுத்து மீட்பு படையினர் விரைந்து வந்தனர். கனமழை காரணமாக உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* பேச்சுவார்த்தைக்கு தயார்! - ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அதிரடியாக அறிவித்தார். எனினும், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

* மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,688 க்கு விற்பனை - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!..

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,688 க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,086 விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.74 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இம்மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டும் நிலை ஏற்பட்டது.

இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.40,528க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,006-க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.70க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது.

அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,608-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,076-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,688 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,086 விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.74 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயார்!

இருதரப்பு உறவுகள் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை காண இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என சீனா அறிவித்துள்ளது.

இதுபற்றி அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்தியாவும், சீனாவும் ராணுவம் மற்றும் தூதரகங்கள் வழியாக தொடர்பை வைத்திருக்கின்றன. எல்லைப்பகுதிகளில் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இரு தரப்பும் உறுதிப்பாட்டுடன் உள்ளன என்றார்.

* சீனாவில் தினமும் 10 லட்சம் கொரோனா

சீனாவின் செஜியாங் மாகாணத்தில் ஒரு நாளைக்கு 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும் விரைவில் அது இருமடங்கு அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

செஜியாங்கில் 6.65 கோடி மக்கள் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்றின் புதிய வகை மிக வேகமாக பரவி வருகிறது.

* பிரசந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நேபாள பிரதமராக பதவியேற்கவுள்ள பிரசாந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அதில், நேபாளத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரசாந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான தனித்துவமான உறவு, ஆழமான கலாச்சார இணைப்பு மற்றும் அன்பான மக்கள் உறவுகளை அடிப்படையாகக் கொண்டது.

இந்த நட்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

* மசூதிகள், கோயில்களிடம் உதவி கேட்கும் ஹரியானா அரசு

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அதிகாலையில் எழுப்புவதற்காக கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் மூலம் அறிவிப்புகளை வெளியிடுமாறு ஹரியானா அரசாங்கம் உதவி கோரியுள்ளது.

இது 2023ல் நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக உதவும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து தயார்படுத்தும்படி அம்மாநில கேட்டுக்கொண்டுள்ளது.

* இனி பாஸ்வேர்ட் பகிர முடியாது

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்களின் பாஸ்வேர்டை நம் நண்பர்களுக்கு பகிர்ந்திருப்போம். ஆனால் இனி அப்படி செய்யமுடியாது.

சந்தாதாரர்கள் இனி தங்கள் பாஸ்வேர்டை பிறருடன் பகிரமுடியாத ஒரு புதிய முட்டுக்கட்டையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது.

இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் சந்தாதாரர்களை உயர்த்தும் நோக்கில் இந்த புதிய திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் கொண்டு வர உள்ளது.

* கோட்சே வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’

ராகுல் காந்தியின் பேச்சு ஜவஹர்லால் நேரு பேசுவது போல் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பேசினார்.

'மாமனிதர் நேரு' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது ஒற்றுமை நடைபயணம் இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

* பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவது எப்படி?

பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியை ஜன.2ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே நாளை முதல் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க உள்ளனர்.

அந்த டோக்கனில் எப்போது பொருட்களை பெற வேண்டும் என்ற விவரம் இடம்பெற்றிருக்கும்.

அந்த தேதியில் குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவர் சென்று கைரேகை பதிவு செய்து பரிசுத்தொகுப்பை வாங்கலாம்.

* மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

* மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரது வீட்டையும் மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மௌகஞ்ச் பகுதியை சேர்த்தவர் பங்கஜ் திரிபாதி அதே பகுதியை சேர்த்த 19 வயது பெண் ஒருவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள பங்கஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. அந்த பெண் மறுத்ததால் அவர்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்கும் போது வீடியோ எடுக்கவேண்டாம் என்று பங்கஜ் கூறியும் அதையும் மீறி அவரது நண்பர் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கபட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தலைமறைவாக இருந்த இளைஞரை கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ளமுடியாது என ட்விட்டரில் பதிவிட்ட மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கைதுசெய்யப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன் அவரது வீட்டையும் மாவட்ட நிர்வாகம் இடித்துத்தள்ளியதாக தெரிவித்துள்ளார்.

அரசு நிலத்தை ஆக்ரமித்திருந்ததால் வீடு இடிக்கப்பட்டதாக விளக்கமளித்த போலீசார் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்ட்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர். தாக்குதல் வீடீயோவை வெளியிட்ட பங்கஜின் நண்பரும் கைதுசெய்யப்பட்டார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து பெண் பலி: `கடவுளின் செயல் என ஏற்க முடியாது' - ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு!..

திருச்சி-திண்டுக்கல் சாலையில் பொன்னம்பலப்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு பலகை விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காற்று அடித்ததால் பலகை விழுந்தது. இது கடவுளின் செயல் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இது கடவுளின் செயல் என்று ஏற்க முடியாது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்தை, விபத்து நடந்த நாளில் இருந்து தற்போது வரை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

* கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுதுறை உத்தரவு.

அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் உத்தரவு.

* நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தாஹல் பதவியேற்பு

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (MC)-ஐ சேர்ந்த தாஹல், ஏற்கனவே 2 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்

* கடலூர்: சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை, சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி, ஆளுநர் உரையுடன் தொடங்கும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து வரலாம்; எனினும் கட்டாயம் இல்லை. கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு இடையே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது - சபாநாயகர்

* அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு
தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு

’சி’ மற்றும் ’டி’ பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம்.

முழு நேர பகுதி நேர பணியாளர்களுக்கு ரூ.1,000 மிகை  ஊதியம், ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.500 - தமிழ்நாடு அரச

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages