அக்னிப்புரட்சி இன்றைய (27.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (27.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (27.12.2022) முக்கிய செய்திகள்.

* புற்று நோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை கவலைக்கிடம்.

இதயம் மற்றும் சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை.

* கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன்.

2017-ல் கோடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்தவர் முரளி ரம்பா.

தற்போது அவர், சிபிஐ-யில் பணிபுரிவதால் அவருக்கான சம்மனை சிபிஐ தலைமைச் செயலகத்துக்கு அனுப்பியுள்ளது சிறப்பு புலனாய்வுத்துறை.

ஜனவரி முதல் வாரத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் விசாரணைக்காக முரளி ரம்பா ஆஜராவார் என தகவல்.

* தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து 18 ஆயிரம் பேர் அடுத்த கட்ட உடல் தகுதித் தேர்வுக்காக அழைக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் என 3 ஆயிரத்து 552பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர்மாதம் 27-ம் தேதி நடைபெற்றது.

இத்தேர்வை தமிழகம் முழுவதும் 295 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 99,820 பேர் எழுதினர்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், அந்த தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உடல் தகுதித் தேர்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தின் அடிப்படையில் கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 18,671 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.

உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டத் தேர்வில்கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

* அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்

நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி
பெருவிழா 22-23  பகல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில்

இன்று நம்பெருமாள்,
அரங்கனையன்றி மற்று
தெய்வம் அறியா தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கு ஏற்க, ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து,  ஸ்ரீரங்க விமான பதக்கம் (பெரியபெருமாள், நம்பெருமாள், உபயநாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவாரபாலகர்கள் என 8 திருமேனி பதிக்கப் பெற்றது)  அடுக்கு பதக்கங்கள், சிகப்புக்கல்  அபயஹஸ்தத்துடன், பச்சைவர்ண வஸ்திரம், 6 வட பெரிய முத்து சரம் சாற்றி, பின் சேவையாக - அண்டபேரண்ட பக்க்ஷிபதக்கம், புஜ கீர்த்தி கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார்..

* 39 நாட்களில் 223 கோடி வருமானம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட 39 நாட்களில் 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்; 223 கோடி வருமானம் கிடைத்துள்ளது- திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன்.

* தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில், சதமடித்தார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்தார் வார்னர்.

* பள்ளிக்கல்வித்துறை சார்பில் பொது நூலக இயக்ககம் சென்னை இலக்கியத் திருவிழாவினை 06.01.2023 முதல் 08.01.2023 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தவுள்ளது.

இதில் சென்னை கல்வி மண்டலத்தைச் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு இலக்கியப் போட்டிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படவுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் https://t.ly/8qC- என்ற கூகுள் படிவத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்

* ஐசியு நிரம்பியது'; மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது - சீனாவை பந்தாடும் கொரோனா...!

கடந்த 2 ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கில் உயிர்களை காவு வாங்கியது. ஆனால், விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முறியடிகப்பட்டது. மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், தொடக்கத்தில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தாத கொரோனா தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தனது கோர முகத்தை காட்டத்தொடங்கிவிட்டது.

கடந்த 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சீனாவில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரே நாளில் அதிகபட்சமாக 3 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் பீஜிங்கில் உள்ள பீஜிங் யுனேட்டட் குடும்ப மருத்துவமனையில் டாக்டராக உள்ள ஹவ்ரட் பெர்ஸ்டின் கூறுகையில், மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேன். இது போன்ற சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. எனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் (கொரோனா) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், கிட்டத்தட்ட அனைவரும் முதியவர்கள். நிறைய பேர் கொரோனா மற்றும் நிமோனியா அறிகுறிகளுடன் உள்ளனர்.

(சீனாவில் உடலை தகனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்...

Watch: https://youtu.be/xG5BE5F1t7c

இதயத்தை உலுக்கும் வீடியோ...)

அழுத்தம் மிகுந்த ஒருநாள் பணியை முடித்த பின் பேசிய டாக்டர் ஹவ்ரட் பெர்ஸ்டின், தொடக்கம் முதல் இறுதி வரை மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது' என்றார். ஐசியு நிரம்பிவிட்டது. அவசர பிரிவு, காய்ச்சல் பிரிவு மற்ற பிரிவுகளும் நிரம்பிவிட்டன.

மிகப்பெரிய சவால் என்னவென்றால் உண்மையை கூறவேண்டுமானால் நாங்கள் இதற்கு தயாராகவில்லை' என்று டாக்டர் ஹவ்ரட் பெர்ஸ்டின் கூறினார்.

சீனாவின் மேற்கு நகரமான ஜுயன் நகரில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 22 வயதான நர்ஸ் வாங்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், கடந்த வாரத்தில் எனது பிரிவில் 45 முதல் 51 நர்சுகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவசர பிரிவில் அனைத்து ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. என்னுடன் வேலை செய்பவர்கள் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து டாக்டர்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டபோதும், லேசான காய்ச்சல் இருந்தபோதும் பணிக்கு வரவேண்டும் என்று எனக்கும், சக ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

ஆயிரக்கணக்கான முதியவர்கள் இறந்திருக்கலாம் என்று கவலை கொள்வதாக சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் சுகாதாரம் தொடர்பாக தகவல் சேகரிப்பு நிறுவனம், சீனாவில் கொரோனாவுக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துகொண்டிருக்கலாம்' என்று கணித்துள்ளது.

* வாட்சப் ஸ்டேட்டஸ் மூலம் வன்முறையைத் தூண்டினால் புகார் தரலாம்: வாட்சப் செயலியில் புதிய வசதியை அறிமுகம் செய்கிறது மெட்டா!..

கலிபோர்னியா: வாட்சப் செயலியில் வன்முறையை தூண்டும் விதமாக ஸ்டேட்டஸ் வைத்தால் அது குறித்து வாட்சப் நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயலியான வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை பெரும்பான்மையானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வாட்சப் ஸ்டேட்டஸ் வசதி பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக வாட்சப் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டால் பயனர்கள் அதுகுறித்து வாட்சப் நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் புதிய வசதி வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அத்துடன் வாட்சப் ஸ்டேட்டஸ் மூலம் தனிநபர்களை தரக்குறைவாக விமர்சிப்பது, பெண்களை அவதூறாக சித்தரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் புகார் செய்யலாம் என வாட்சப் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்திருக்கிறது.

அப்படி செய்யப்படும் புகார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தொடர்புடைய ஸ்டேட்டஸ் நீக்கப்படும் என்றும் மெட்டா கூறியுள்ளது. எனினும் பயனர்கள் அனுப்பும் செய்திகள், படங்கள், காணொளிகள், உரையாடல்களின் பாதுகாப்பில் வாட்சப் உட்பட எவரும் குறுக்கிட முடியாது என்றும் மெட்டா உறுதிப்படுத்தியுள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு - 10 பேர் கைது..

இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். மேலும் படகிலிருந்த ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக இந்திய கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது.

படகிலிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சுமார் 40 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக படகு ஓகாவுக்கு கொண்டு வரப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளது.

* அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை:

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை.

அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது பற்றியும், மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார்.

”சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, நாடாளுமன்ற தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்”

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டாக வலியுறுத்தல்

”பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம்; அரசியலில் போலி ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும். ஆலோசனை கூட்டத்தில் நத்தம் விஸ்வநதன் பேச்சு

* நாங்கள் பழப்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான்; ஆனால் பழமைவாதிகள் அல்ல”

சென்னையில் நடந்த இந்திய வரலாற்றுப் பேரவையின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு.

TELEGRAM: t.me/agnipuratchi1

* சென்னை: குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

7301 காலிப்பணியிடங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜீலை 24ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.

குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளன.

தேர்வர்கள் மகிழ்ச்சி:

பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும்.

இதனால் கடந்த ஜீலை 24ம் தேதி தேர்வு எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

* மீண்டும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்; பான் - ஆதார் இணைப்பது எப்படி? ஏன் அவசியம்?

மார்ச், 31, 2023க்குள் பான் அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். மக்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் இணைக்காவிட்டால் பான் அட்டை எண் செயலற்றதாகிவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி ஆதார் - பான் எண் இணைப்புக்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இது கட்டாயம். தாமதம் செய்யாதீர்கள், இன்றே இணையுங்கள்” என பான் அட்டை வைத்திருக்கும் அனைவரும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் ஆதாருடன் இணைக்க வேண்டும்.

இல்லையென்றால் பான் அட்டை எண் செயலற்றதாகிவிடும் மற்றும் இணைக்கப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும்.

மேலும், வருமான வரி நிலுவையில் உள்ள அனைத்து ரிட்டன்களும் செயலாக்கத்திலிருந்து நிறுத்தப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

ஒரு சிலருக்கு இந்த இணைப்பு திட்டத்திலிருந்து விலக்கு உள்ளது. அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் தனியாக வசிப்பவர்; வருமான வரிச் சட்டம், 1961-இன் படி குடியுரிமை இல்லாதவர்; முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் எண்பது வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்; இந்தியாவின் குடிமகனாக இல்லாதவர்கள் இந்த இணைப்பை செய்யத் தேவையில்லை.

பான் - ஆதார் இணைப்பிற்கான இறுதி நாள் மற்றும் கட்டணம்:

மத்திய நேரடி வரிகள் வாரியம் பான் - ஆதார் இணைப்பிற்கான இறுதி நாளை மார்ச் 31, 2022லிருந்து மார்ச் 31, 2023க்கு அதிகரித்துள்ளது. இந்த இணைப்பு சேவைக்கு 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். வருமான வரித்துறை எச்சரித்துள்ளபடி கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் பான் - ஆதாரை இணைக்காவிட்டால் பான் அட்டை எண் செயலற்றதாகிவிடும்.

பான் அட்டையின் தேவைகள்:

பான் அட்டையானது பத்து இலக்க எண்ணைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் தொடங்குவதற்கு அவசியமானது.

தனிநபர்களின் பான் அடையாளமானது வருமான வரித்துறையால் பண வரவு மற்றும் செலவுக் கணக்கைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

வருமான வரி செலுத்தும்போதும், வரியை திரும்பப் பெறும்போதும், வருமான வரித்துறையிடமிருந்து தகவல் பெறும்போதும் பான் எண் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, வங்கிக்குப் பணத்தை மாற்றுதல், புதிய வாகனங்கள் வாங்குதல் போன்ற பல தேவைகள் உள்ளன.

ரூ.50,000க்கு அதிகமான பெரிய பரிவர்த்தனைகளைத் தொடங்கவும் பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

TELEGRAM: t.me/agnipuratchi1

* பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க அரசுக்கு உத்திரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு.

கடலூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு.

கவுகாத்தி செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில், அமர்ந்து இடம் தர மறுத்து அடாவடி செய்த வடமாநிலத்தவர்கள்.

முன்பதிவு செய்தவர்கள் அளித்த புகாரில் திருவொற்றியூரில் ரயில் நிறுத்தப்பட்டு, போலீசார் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 1000 பேரை வெளியேற்றினர்.

4 பேர் அமரக்கூடிய இடத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்து, முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் அடாவடி செய்துள்ளனர்.

தொடர்ந்து இதுபோல் நடப்பதால், ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் கோரிக்கை.

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு.

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. 

அரிசி வழங்கும் சிறப்புப்பணிக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்க அறிவித்துள்ளது.

பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் அரிசி வழங்கும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800, அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325 ஆக விலை நிர்ணயம்.

* சுடுகாட்டில் வரிசை கட்டும் மக்கள் (VIDEO)

சீனாவில் இருந்து ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தரும் தகவல்களும் வீடியோக்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடந்த சில நாட்களாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவது போன்ற காட்சிகள் இணையத்தில் வலம் வந்தது. இந்நிலையில் சீனாவின் இடுகாடுகளில் மக்கள் வரிசை கட்டி நிற்பது போன்ற வீடியோவினை எரிக் என்ற அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்டிருக்கிறார்.

சீனாவின் நிலை உலகில் அனைவருக்குமே பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

VIDEO: https://youtu.be/xG5BE5F1t7c

குவியல் குவியலாக உடல்கள்

சீனாவில் கோவிட் தொற்று படுவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் லட்சக்கணக்கான பாதிப்புகள் ஏற்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் கல்லறைத் தோட்டங்களிலும், இடுகாடுகளிலும் குவியல் குவியல்களாக கொரோனா நோயாளிகளின் உடல்கள் குவிக்கப்பட்டிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கொத்து கொத்தாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

* ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் போது

தென்னாப்பிரிக்க வீரர் Nortje தலையின் மீது மோதிய ஸ்பைடர் கேமரா.

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் நடந்த திருமண விழாவில் கேரளாவை சேர்ந்த மணப்பெண் ஒருவர் சண்டமேளம் வாசித்தார். மணப்பெண்ணின் தந்தை ஒரு செண்டை மாஸ்டர் மற்றும் மகள் அதை உற்சாகமாக விளையாடுகிறாள், இறுதியில் அவளது அப்பாவும் (பச்சை நிறத்தில்) சேருகிறார். மணமகனும் (மெரூன் நிறத்தில்) அதிர்வுகளை அனுபவிக்கிறார்.

* தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30ம் தேதி முதல் வழங்கப்படும்

வரும் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன்

* PT USHA, தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கம் பதவியை வகிக்கும் முதல் பெண்.

* 2024 தேர்தலில் பாஜகவின் இரண்டு வெற்றி வேட்பாளர்களை கோவை, நீலகிரி தொகுதியில் கொடுக்க இருக்கிறார்கள் என்பதற்கு அச்சாரமாக இந்த விழா இருக்கிறது.

- கோவையில் பாஜக தேசிய தலைவர் நட்டா கலந்து கொண்ட விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

* புதுச்சேரியல் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - புதுச்சேரி அரசு

மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகைக் கடைபிடிக்க வேண்டும்.

புது வருட கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 அன்று 01.00 AM மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உணவகங்கள்/ஹோட்டல்கள்/பார்கள்/ மதுபான கடைகள்/ விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் தடுப்பு உரிய நடைமுறைகளை (SOP) பின்பற்றி தங்களில் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது.

அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கோவிட் 19 தடுப்புக்குரிய நடைமுறைகளின் (SOP) படி செயல்பட வேண்டும்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பொது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து தனியார் கடைகள் மாற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கோவிட்-19 தடுப்புக்குரிய நடைமுறைகளைப் (SOP) பின்பற்றி செயல்பட வேண்டும்.

* டி20 போட்டிகளுக்கு தற்காலிக ஓய்வு?

Watch: https://youtu.be/Wu4eN-NXNcU

கோலியின் முடிவு பற்றிய பரபரப்பு தகவல்கள்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages