திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் உள்ள கல்விக்கோயில் வளாகத்தில் 1000 பனைமர விதை நடும் திருவிழா: மருத்துவர் இராமதாசு அய்யா, மற்றும் மாணவர்கள் பங்கேற்று பனைவிதைகளை நட்டனர்
திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளையும், மலர்க்கன்றுகளையும் நட்டு அந்த வளாகத்தையே சோலைவனமாக்கும் முயற்சியில் அறக்கட்டளை நிறுவனரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ச.இராமதாசு ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பார்க்க முடியாத ஏராளமான வகை மரங்கள் கல்விக் கோயில் வளாகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
அந்த வரிசையில் கல்விக் கோயில் வளாகத்தில் இதுவரை மரம் நடப்படாத நிலங்களில் பனை மரங்கள் நடப்படும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள். அந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1500-க்கும் அதிகமான பனை விதைகள் நடப்பட்டு இப்போது அவை வளரத் தொடங்கியுள்ளன.
அடுத்தக்கட்டமாக, 1000 பனை விதைகளை நடும் திருவிழா இன்று நடைபெற்றது. இராதாபுரத்தைச் சேர்ந்த வனம் அறக்கட்டளையுடன் இணைந்து கல்விக் கோயில் வளாகத்த்தில் நடத்தப்பட்ட இந்த திருவிழாவை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்களும் பனை விதைகளை நட்டார்கள்.
அத்துடன் மாணவர்களுக்கு மகாகனி மரக்கன்றுகளை மருத்துவர் அய்யா அவர்கள் வழங்கினார். விரைவில் அடுத்தகட்ட பனை விதை நடும் திருவிழா நடத்தப்படவிருக்கிறது.
No comments:
Post a Comment