வானில் அதிசயத்தை நிகழ்த்தும்
பறவைகள் கூட்டம்! - மருத்துவர் இரா. சுதாமன், பெங்களூர்
பறவையைக் கண்டான்
விமானம் படைத்தான்...
பழைய திரைப்படப்பாடல். ஆனால், பறவைகள் மனிதர்களை விடக் " கில்லாடிகள்".
ஆறறிவு படைத்த மனிதனை விட ஐந்தறிவு உள்ள பறவைகளின் அறிவுத் திறன், ஆற்றல் , வானில் நிகழ்த்தும் அதிசயங்கள் பற்றி முகநூலில் இயம்ப விழைகிறேன்.
ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்தில், ஒரே திசையில், ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளாமல்
பறக்கும் அற்புதமான காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பறவைகள் கூட்டமாக வானில்
பறப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
1) உணவு. (Food)
2) இடம் பெயர்தல் ( Migration)
சில பறவைகள் ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து
தங்களுக்குப் பிடித்தமான இடங்களில் முகாமிடுகின்றன.
இந்த பறவைகள் 30,000 அடிகள் உயரத்தில் கூட
பறக்கும் ஆற்றல் உடையன. ஆனால் சாதாரணமாக
500 அடி உயரத்தில் இவ்வித பறவைகள்
வானில் பறந்து சாகசங்கள் புரிகின்றன.
பறவைகளுக்கு 1)Bio Radio Signal (உயிரியல் கதிரியக்க ம்)
2)Geo Magnetic field ( புவியின் காந்தப்புலம்)
3) Compass magnetic (திசைகாட்டி காந்தம்)
ஆகிய மூன்று முதன்மை செயல்பாடுகள்
பறவைகள் உயரே பறக்க, திசைமாற
உதவி புரிகின்றன. இன்னொரு முதன்மையான செயல்பாடு Murmuration ( முணுமுணுப்பு)
அதாவது தொடர்ந்து மெல்லொலி செய்தல்.
இதன் மூலம் பறவைகள் மேலும் கீழும் மற்றும் திசைகள் நோக்கி பறக்க, அவற்றின் இறக்கைகள்
வினாடிக்கு 70 தடவைகள், நிமிடத்திற்கு 4000 தடவைகள் ( Beats) அடித்துக் கொள்கின்றன.
பறவைகள் ஒன்று சேர்ந்து வெவ்வேறு வடிவங்களில் பறப்பதற்கு எந்தவொரு
பயிற்சியும் எடுக்கவில்லை. இந்த பறவைகளை வழிநடத்த ஒரு தலைவனும் கிடையாது.
எந்த ஒரு பறவையும் தனக்கு அருகில் செல்லும் 7 பறவைகளின் அசைவுகளைப் பொறுத்தே தானும்
அது போன்று பறக்கிறது. பறக்கும் போது வித்தைகளை கடல் அலை போல் வளைந்தும் நெளிந்தும்
பறப்பதற்கு அவற்றுற்குள் நடக்கும் திசைமாறுதலே காரணம்.
பறவைகள் பறக்கும் போது ஒரே திசையில் ( Unison) ஆக பறக்கும். பறவைகள் V வடிவத்தில் பறப்பது அற்புதமான, அழகான ஒரு காட்சி ஆகும். போர் விமானங்கள் (Squadron Planes) எரிபொருள் சேமிக்க V வடிவத்தில் பறக்கும். அதே சூத்திரத்தை இந்த பறவைகளும் ( அபாரமான மூளை)
கையாளுகின்றன. Vவடிவத்தில் பறவைகள் பறப்பதால் பறக்கும் சக்தி சேமிப்பு
அதிகரிக்கிறது.
ஒவ்வொரு பறவையும் தன் திசையில் முன்
பறக்கும் பறவையை விட சற்று மேலே பறக்கும் .இதனால்
( Air Current) காற்றின் வீரியம் குறைகிறது.
தங்கள் கூட்டத்தில் உள்ள மற்ற பறவைகள்
பின் தொடர வசதியாக உள்ளது.
பறவைகள் ஆயிரக்கணக்கில் ஏன் 7,50,000 பறவைகள்
வரையிலும் வானில் ஒரே திசையில் பறக்கும் நிகழ்வுகள்
காண கண் கோடி வேண்டும்.
பறவைகள் தங்களுக்குள் எந்தவொரு பேதமுமின்றி , ஒற்றுமையாக
ஒருங்கிணைந்து ஒரே திசையில் தங்கள்
பயணங்களை மேற்கொள்கின்றன.
பறவைகள் நம் மானிடப்
பிறவிக்குக் கற்றுத் தரும் பாடம் இது.
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்..!
(நன்றி: மருத்துவர் இரா. சுதாமன், பெங்களூர்)
No comments:
Post a Comment