அக்னிப்புரட்சி இன்றைய (28.12.2022) முக்கிய செய்திகள்.
* புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது:
புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள வீட்டில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் முன்னெச்சரிக்கையாக கைது.
புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி அதிமுக இன்று பந்த்-க்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில் போலீஸ் நடவடிக்கை.
* கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
ஜனவரி 5ம் தேதி தேரோட்டம், 6ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுந்த ஏகாகதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 6ம் நாள்:
இன்று (28.12.2022) காலை ஸ்ரீ நம்பெருமாள், சிக்குத்து ஆடை கொண்டை, கலிங்கத்துரை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், புஜகீர்த்தி, மகாலெட்சுமி பதக்கம், பவளமாலை முத்துச்சரம், பருத்திக்காய் காப்பு மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* தென்கொரியாவுக்குள் வடகொரியா அடாவடி
தென்கொரியாவை சீண்டும் விதமாக வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது.
இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் 5 டிரோன்களை தென்கொரியாவை நோக்கி அனுப்பியது. இந்த டிரோன் தென்கொரியா வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது. அதில் ஒரு டிரோன் தென்கொரியா தலைநகர் சியோலின் எல்லை வரை பறந்தது. இதனால் தென்கொரியாவில் பதற்றம் உருவானது.
* ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி தந்த புடின்
ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்ய அதிபர் புடின் தடை விதித்துள்ளார். பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் இந்த தடை, ஜூலை 1, 2023 வரை அமலில் இருக்கும். ரஷ்யாவின் இந்த முடிவால் ஐரோப்பாவில் கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும்.
ஐரோப்பிய நாடுகள் எண்ணெய்க்காக ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளன. பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே எரிசக்தி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன.
* அம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் அம்மை தொற்றால் 1,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மும்பையில் மட்டும் அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது. இதுவரை அம்மை பாதிப்பால் 20 பேர் பலியாகினர்.
இந்நோயால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், தும்மல், இருமல் மூலமும் அம்மை பரவுவதாக மருத்துவர்கள் கூறினர்.
* திருப்பதியில் ஜன.1ல் புதிய கட்டுப்பாடு அமல்
ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* பொங்கல் பரிசு வாங்கும் போது கை பையை எடுத்து வர மறக்காதீங்க!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கான டோக்கன் டிச.30ம் தேதி விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த முறை பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கு பைகள் வழங்கப்படாது. அதனால், பொதுமக்கள் மறக்காமல் வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டார்.
* தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை.
தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதுபற்றி அவர், புத்தாண்டு, அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. எனினும், பொதுமக்களுக்கு சுயக்கட்டுப்பாடு என்பது அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முன்னதாக, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* தமிழகத்தில் இங்கெல்லாம் முககவசம் அவசியம்
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
இதுபற்றி அவர், சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்கவும், கிருமிநாசினி வழங்கவும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
* பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு திங்கட்கிழமைக்க்கு ஒத்திவைப்பு
கடலூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
* கேரளா மாநிலம் இடுக்கி மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து 3 குட்டி யானைகள் உயிரிழந்தன.
தேவிக்குளம் வனப்பகுதியில் ஒரு குட்டி யானையும், குண்டலாவில் இரு குட்டி யானைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. உடற்கூராய்விற்கு பின்புதான் குட்டி யானைகளின் உயிரிழப்பு குறித்த காரணம் தெரியவரும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
* திமுகவின் 23 அணிகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் “40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்கள்பணி ஆற்றிட வேண்டும்'
திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
* பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு.
பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு செங்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு பாதுகாப்பை உறுதி செய்க'
டெல்லி, ஹரியானாவில் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என காங்கிரஸ் புகார்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம்
* இரத்ததில் ஓவியம் வரைந்து விருப்பமானவர்களுக்கு அனுப்பும் ஃ"ப்ளட் ஆர்ட்" எனும் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இது சரியானது அல்ல - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திருச்சியில் பேட்டி.
ஒருவரது உடலிலிருந்து ரத்தத்தை எடுப்பது மருத்துவத்துறையினரது வேலை. இரத்தம் என்பது மிக அத்தியாவசியமான ஒன்று. அதை ஓவியம் போன்றவற்றிற்கு பயன்படுத்தக்கூடாது.
தவிர ஒருவரது உடலிலிருந்து முறையற்ற முறையில் எடுக்கப்படும் ரத்தம் மூலம் நோய் பரவும் சூழலும் ஏற்படும்.
நேற்று சென்னையில் இதுபோன்ற நிறுவனங்களை ஆய்வு செய்து எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் அந்த பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஓவிய பணியை நிறுத்தாவிட்டால், அந்நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.
இளைஞர்கள் இத்தகைய விசயங்களில் ஆர்வம் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் - அமைச்சர் மா.சுப்ரமணியன்.
* புத்தாண்டு கொண்டாட்டம் - காவல்துறை கட்டுப்பாடு.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது" - தமிழ்நாடு காவல்துறை
"நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை”
மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது; மீறினால் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
* பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க கோரி தி.மலையில் வரும் ஜன.2ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது என தமிழக அரசு எடுத்த முடிவு அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - எடப்பாடி பழனிசாமி
* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேச பட்டியல்.
ஒட்டுமொத்தமாக 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
* பிரதமர் மோடியின் தாயார் ஹீராபெண் மோடி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகம் மருத்துவமனை அறிக்கை
* சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன. 5-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* கோவை கார் குண்டு வெடிப்பு: மேலும் இருவர் கைது.
கோவை கார் குண்டு வெடிப்பில், ஷேக் இதயதுல்லா, சனோபர் அலி என இரண்டு பேரை இன்று(டிச.,28) என்ஐஏ கைது செய்துள்ளனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில் ஜமேஷா முபீன், 29, பலியானார்.
ஐ.எஸ்., பயங்கரவாதியான அவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் முக்கிய கோவில்கள், அரசு அலுவலகங்களை தகர்க்க திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் முகமது அசாருதீன், 23, பெரோஸ் இஸ்மாயில், 27, உமர் பாரூக், 39, பெரோஸ் கான், 28, அப்சல் கான், 28 ஆகியோரை என்.ஐ.ஏ., தனிப்படையினர் கஸ்டடியில் வைத்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் ஷேக் இதயதுல்லா, சனோபர் அலி என இரண்டு பேரை இன்று(டிச.,28) என்ஐஏ கைது செய்துள்ளனர்.
இவர் இருவரும் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆவர். இவர்களிடம் என்ஐஏ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
TELEGRAM: t.me/Agnipurechi1
* பொன்னியின் செல்வன் 2-வது பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் மற்ற பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும், இப்படத்தை அடுத்தாண்டு(2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கோவிட்.
புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து, கடந்த 2 நாட்களில் இந்தியா வந்த 39 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் ஒமைக்ரான் வைரசின் புதிய வகை பரவல் வேகம் எடுத்ததால், அந்நாடு திணறி வருகிறது.
இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவும் பல முன்னேற்பாடுகளை செய்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
அந்த வகையில், வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.
6 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிகிறது. கோவிட் உறுதியான 39 பேரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் ஆய்வு
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, விமான நிலையங்களில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை(டிச.,29) ஆய்வு செய்ய உள்ளார். அப்போது, டில்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியம்!
இதனிடையே, அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியம் என சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், முந்தைய பாதிப்புகளை மேற்கொள்காட்டி, இந்த நாட்களில், இந்தியாவில் கோவிட் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளனர்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* தமிழகத்தில் 6 பேருக்கு கோவிட்
வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய 6 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த வகையான கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ல் துபாயில் இருந்து சென்னை வந்த ஒருவர், நேற்று, ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும், மதுரை வந்த இரண்டு பேருக்கும் கோவிட் உறுதியாகி இருந்தது. துபாயில் இருந்து இன்று சென்னை வந்த இரண்டு பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இரண்டு பேரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
* புத்தாண்டு கொண்டாட்டம் - தமிழ்நாடு காவல்துறையின் அறிவுரைகள்!
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு
31.12.2022 பாதுகாப்பாகவும், அமைதியாகவும் அறிவுரைகளை கடைப்பிடிக்க அன்று மாலை கொண்டாடும் காவல்துறை பொதுமக்கள் புத்தாண்டை பொருட்டு கீழ்க்காணும் கேட்டுக்கொள்கிறது.
31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.
31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள்
கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது. மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள்.
மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.
வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும்.
TELEGRAM: t.me/Agnipurechi1
கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100. என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் இரகசியம் காக்கப்படும். தகவல் தரும்
அவசர உதவி தேவைப்படுபவர்கள் 'காவல் உதவி' என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கு 'காவல் உதவி' செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.
அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்.
அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். - காவல்துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு
* எட்டாம் வகுப்பு தேர்ச்சியா? -அரசு வேலை ரெடி
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறையில் காலியாக உள்ள Bill Clerk & Helper பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் - தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்.
பதவி - Bill Clerk & Helper
காலியிடங்கள் - 450
கல்வித்தகுதி - 12th, 8th
சம்பளம் - 8717-8784
வயது வரம்பு - 32.
பணியிடம் - மதுரை.
தேர்வு முறை - எழுத்துத்தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை.
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்.
முகவரி - Regional Manager, Regional Office,
Tamil Nadu Civil Supplies Corporation, NO:10 Kuruvikaran Salai, Anna Nagar, Madurai-625020.
கடைசி தேதி - 10ஜனவரி,2023
அதிகாரப்பூர்வ இணையதளம்.
- http://www.tncsc.tn.gov.in
TELEGRAM: t.me/agnipuratchi1
* ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம்...!
* இந்தியாவில் ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்: சுகாதார அமைச்சக அறிக்கை!..
அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரேசில், கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, கொரோனா கால தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது.
இதற்காக பல்வேறு மாநில மருத்துவமனைகளில் நேற்று முதல் சோதனை முயற்சி தொடங்கி தொடர்ந்து வருகிறது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் மத்திய சுகாதார மந்திரி மாண்டவியா நேற்று நேரிடையாக சென்று ஒத்திகை முயற்சிகளை பார்வையிட்டார்.
இந்தியாவில், அடுத்த 40 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இது ஜனவரி மத்தியில் அதிக பரவலாக மாற கூடும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் இன்று தெரிவித்து உள்ளன.
இதேபோன்று உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்த்தல் ஆகியவையும் மிக குறைவாக காணப்படும் என்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முகக்கவசம்😷 அணிவோம்!!..
சமூக இடைவெளியை பின்பற்றுவோம்!!.
* பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!..
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்து சென்றுள்ளனர். இதையடுத்து நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நீரை குடித்து வந்த அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை கடைபிடிக்கப்படுவதாகவும், கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, பட்டியலின மக்கள் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில், ஆர்டிஓ முன்னிலையில் இன்று இரு தரப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வருவதை நாங்கள் தடுக்கவில்லை என விளக்கம் அளித்த அவர்கள், எழுத்துப்பூர்வ ஒப்புதலை ஆர்டிஓவிடம் வழங்கினர்.
* ஆந்திராவில் கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பலி
ஆந்திரா, நெல்லூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழப்பு
உயிருக்கு ஆபத்தான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.
No comments:
Post a Comment