அக்னிப்புரட்சி இன்றைய (26.01.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.01.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.01.2023) முக்கிய செய்திகள்.

* நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது

முதல் பரிசு -  திருப்பூர் வடக்கு காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்

இரண்டாம் பரிசு - கோட்டை காவல் நிலையம், திருச்சி மாநகரம்

மூன்றாம் பரிசு - திண்டுக்கல் வட்ட காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்டம்

* நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது

டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார்.

* நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னை : மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை

அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

* 74வது குடியரசு தின விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.

சென்னை, மெரினாவில் 74வது குடியரசு தின விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்,என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

* டெல்லி: 74வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.

எகிப்து அதிபர் அப்தெல் பத்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.

டெல்லி: 74வது குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

* ரூபாய் 43,000த்தை கடந்தது தங்கம் விலை.

சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,380-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.75-க்கு விற்பனை ஆகிறது.

* இடைத்தேர்தல் - அதிமுக பணிக்குழு அமைப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக தேர்தல் பணிக்குழு  பட்டியலை வெளியிட்டார் ஈபிஎஸ்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு.

* சிதம்பரம் நடராஜர் கோயிலின் 152 அடி உயர கோபுரத்தில் பறக்கும் தேசியக்கொடி.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 74வது குடியரசு தின விழா முன்னிட்டு கிழக்கு கோபுரத்தில்  தீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

* சென்னை கே.கே. நகரில் உள்ள ESIC மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று (26.01.2023) பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குடியரசுதின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

* நாட்டின் 74வது குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்ற விமான சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ரஃபேல், மிக்-29, சு-30 உள்ளிட்ட விமானப்படை விமான சாகசங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது. விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களின் வான் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

தமிழ்நாடு, கேரளா, அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.

டெல்லியில் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு சார்பில் கலாச்சார அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்றது.

அதில் சங்க காலம் முதல் தற்போது வரை பெண்களின் பங்களிப்பு குறித்து அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஔவையார், வேலுநாச்சியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி, இயற்கை விவசாயி பாப்பம்மாளின் உருவங்கள் அடங்கிய சிலை மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலும் இடம்பெற்றது.

* அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மெட்டா நிறுவனம் நீக்குகிறது.

* பிரபல கணினி தொல்நூட்ப நிறுவனமான ஐ.பி.எம்., பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 3,900-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளது.

* பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் (92) காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

ரஜினிகாந்த் படங்களில் 46 படங்களுக்கு சண்டை பயிற்சியாளர் இவர்தான்.

* தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் தேநீர் விருந்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் காலையில் மெரினா கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைப்பது வழக்கம்.

அன்று மாலையில், சென்னை, கிண்டியில் உள்ள தன்னுடைய மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆளுநரின் அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

தேநீர் விருந்தில் பங்கேற்க சென்ற முதல்வர் ஆளுனருடன் சிறிது நேரம் உரையாடினார்.

முதல்வர் உரையாடிய போது துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, இடதுசாரிகள், விசிக, தவாக, உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.

* ஓபிஎஸ் - இபிஎஸ் பங்கேற்கவில்லை

ஆளுநர் தேநீர் விருந்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியூரில் இருப்பதால் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.

* மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பூசி அறிமுகம்.

புதுடில்லி : பாரத்பயோடேக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்தான இன்கோவேக் தடுப்பூசியை இன்று (ஜன.,26) மத்திய அமைச்சர்கள் மண்சுக் மாண்டவியா, ஜிகேந்தர் சிங் டில்லியில் அறிமுகம் செய்தனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

இதற்கிடையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை, இன்கோவேக்சினை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு டிச., 23ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் பாரத்பயோடேக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்தான இன்கோவேக் தடுப்பூசியை இன்று(ஜன.,26) மத்திய அமைச்சர்கள் மண்சுக் மாண்டவியா, ஜிகேந்தர் சிங் டில்லியில் அறிமுகம் செய்தனர்.

உலகின் முதன் முறையாக மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடூப்பூசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* நெல்லை சுந்தரனார் பல்கலையில் பட்டதாரிகளுக்கு வேலை..!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant, Project Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

பதவி - Technical Assistant, Project Assistant

காலியிடங்கள் - 03
சம்பளம் - 10000-20000
பணியிடம் - திருநெல்வேலி
தேர்வு முறை - நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை- நேரடியாக
விண்ணப்பக்கட்டணம் - இல்லை

முகவரி - The Campus of Manonmaniam Sundaranar University,

Tirunelveli Road, Abishekapatti, Tamil Nadu

இணையதளம் - https://msuniv.ac.in/

கடைசி தேதி - ஜனவரி 31,2023

TELEGRAM: t.me/agnipuratchi1

* நீங்கள் தான் எடுப்பீர்களா... நாங்களும் எடுப்போம்...

கேமராவில் 400 செல்பிகளை எடுத்த கரடி!

நியூயார்க் :
இணையத்தில் பல வேடிக்கையான காட்சிகள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாவதுண்டு. குழந்தைகளின் குறும்புதனம், மட்டுமில்லாமல் நாய், பூனை, யானை போன்ற விலங்குகளின் வீடியோக்களும் அவ்வபோது வைரலாகும்.

இந்தநிலையில் அமெரிக்காவில் விலங்குகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்ட கேமராவில் 400 செல்பிகளை கரடி வித்தியாசம் வித்தியாசமாக எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages