அக்னிப்புரட்சி இன்றைய (27.01.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (27.01.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (27.01.2023) முக்கிய செய்திகள்.

* 16 ஆண்டுகளுக்கு பிறகு, பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 8 மணி முதல் 9 மணிக்கு நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை நேரில் காண முன்பதிவு செய்த 2000 பேருக்கு மட்டும் அனுமதி. பழனியில் குடகுழுக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகமலாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா.

பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என தமிழ் ஒலிக்க நன்னீராட்டு விழா நடைபெற்றது.

கங்கை, காவிரி, சண்முக நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் கலசங்கள் மீது ஊற்றப்பட்டன.

குடமுழுக்கு நன்னீரை பக்தர்கள் மீது தெளிக்க8 இடங்களில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

குடமுழுக்கு விழாவில் ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு மலர் தூவியது ஹெலிகாப்டர்.

* தொழிற்சங்கங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் தேசிய அளவில் ஜனவரி 30,31ம் தேதிகளில்  வேலைநிறுத்தம் அறிவிப்பு.

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்  வேலைநிறுத்தம்.

* உச்சநீதிமன்றத்தை நாடும் எடப்பாடி பழனிசாமி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையீடு.

இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக இ.பி.எஸ். புகார்; ஜன.30ம் தேதி முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தல்.

* நிதித்துறை சார்பில் புதிய வலைதளம் தொடக்கம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் www.ccfms.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

* பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்.

பழம்பெரும் நடிகை ஜமுனா(86) ஜதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.

மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஜமுனா.

* பிபிசி ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலை. தடை:

பிபிசி தயாரித்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் தடை.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திரையிடப்படும் என எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பு கூறிய நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,345க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ.74.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு:

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தியது திருப்தி அளிக்கிறது- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு.

இத்திட்டத்தை கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தவும் உத்தரவு.

* 500 புதிய விமானங்களை களத்தில் இறக்க முடிவு.

ஏர் இந்தியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, தனது வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக 500 புதிய விமானங்களை வாங்க முடிவு, இதற்காக அந்நிறுவனம் 73,300 கோடியை முதலீடு செய்துள்ளது.

முதற்கட்டமாக போயிங், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் CFM இண்டர்நேஷ்னல் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது ஏர் இந்தியா.

* குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் விபத்து தொடர்பான வழக்கில் 1,262 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்!

ஒரேவா குழும நிறுவானத்தின் அதிகாரி ஜெய்ச்சுக் படேல் பெயர், குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு

* பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசுதான்"

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது மத்திய அரசு அல்ல தமிழ்நாடு அரசு தான்

நெல்லையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே சிங் பேட்டி

* ராகுல் பாதயாத்திரை ரத்து.

ஜம்மு கஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ராகுல் காந்தியின் பாதயாத்திரை ரத்து.

போலீசார் தகுந்த பாதுகாப்பை வழங்கவில்லை - ராகுல் காந்தி.

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டி - டிடிவி தினகரன் அறிவிப்பு

* டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

மாணவர்கள் தங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட கூடாது
தேர்வை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை மாணவர்களுக்கு பெற்றோர்கள் நெருக்கடி தரக்கூடாது - பிரதமர் மோடி

* வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது

இன்று நடைபெற்ற சமரச பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து ஜன 30,31 அன்று நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதாக அறிவிப்பு

* மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதளம் ஹேக்.

காங்கிரஸ் உடன் தனது கட்சியை கமல்ஹாசன் இணைக்கப்போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியானதால் ம.நீ.ம தொண்டர்கள் அதிர்ச்சி.

தகவல் அறிந்ததும் இணையதள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாக ம.நீ.ம விளக்கம்.

* முதல் டி20 இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages