அக்னிப்புரட்சி இன்றைய (07.02.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.02.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.02.2023) முக்கிய செய்திகள்.

* துருக்கி, சிரியா நிலநடுக்கம் - பலி 4,000ஐ தாண்டியது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியது.

நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சை.

* பரப்புரையை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் உறுதியானதால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு களமிறங்கியுள்ளார்.

மணல்மேடு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.

* டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை நாளை ஆய்வு செய்கிறது மத்திய குழு.

நெல் கொள்முதல் தொடர்பான வழிகாட்டுதல்களில் கூடுதல் தளர்வு வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்த நிலையில்  ஆய்வு.

* சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 5,373-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு புறப்பட்டு சென்றது.

டெல்லியில் இருந்து 2 பிரிவுகளாக 47 வீரர்கள் முதற்கட்டமாக துருக்கிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

* பெரு: அரேகிபாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது.

தொடர் மழையால் பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கிறது.

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் தென்னரசுக்கு பாஜக முழு ஆதரவு

தோழமைக் கட்சியின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.

பொதுநலன் மற்றும் கூட்டணியின் நன்மை கருதி தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் வாங்கிய ஓபிஎஸ்க்கு நன்றி.

* காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 நெல் மூட்டைகள் கூட கொள்முதல் செய்யப்படவில்லை என அவர் கூறினார்.

* அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.

அதானி விவகாரத்தால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி, எல்ஐசி, வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி விவாதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளிலும் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* துருக்கியில் இன்றும் நிலநடுக்கம்

துருக்கியில் இன்று மீண்டும் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று துருக்கி மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.8 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. அதன் பிறகு 2 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில் இன்று மீண்டும் துருக்கியில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகல்.

குக்கர் சின்னம் கிடைக்காததால் தேர்தலில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages