அக்னிப்புரட்சி இன்றைய (08.02.2023) முக்கிய செய்திகள்.
* சீன உளவு பலூனை கைப்பற்றியது அமெரிக்கா.
அமெரிக்க போர் விமானங்களால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவின் உளவு பலூனை, தீவிர தேடுதலுக்கு பின் அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளது.
பலூனில் இருந்த கருவிகளின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், எஞ்சிய பாகங்களை தேடும் பணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
* வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிந்தது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 96 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
* வசூலில் சாம்சங் எஸ்23 சீரிஸ்!
TELEGRAM: t.me/agnipuratchi1
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்23க்கு (Samsung Galaxy S23) முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ரூ.1,400 கோடி கிடைத்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு சாம்சங் நிறுவனத்தின் எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனாக சாம்சங் இதனை உருவாக்கியுள்ளது.
இந்த எஸ்23 சீரிஸ்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதை உறுதி செய்யும் விதமாக சாம்சங் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது சாம்சங் எஸ்23 சீரிஸ்களுக்கு முன்பதிவின் மூலம் முதல் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1.4 லட்சம் யூனிட்கள் முன்பதிவுகளை பெற்றுள்ளதாகவும், இதன்மூலம், 24 மணி நேரத்திற்குள் சுமார் ரூ.1,400 கோடி வசூல் ஆகியுள்ளதாகவும் சாம்சங் இந்தியா, மொபைல் வர்த்தகத்தின் மூத்த துணைத் தலைவர் ராஜு புல்லன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின்படி, இது கேலக்ஸி எஸ்22 சீரிஸை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் சாம்சங்கின் வியட்நாம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால் சமீபத்திய கேலக்ஸி எஸ்23 போன் தனது நொய்டா ஆலையில் தயாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த எஸ்23 சீரிஸின் அனைத்து போன்களும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
அதேபோல் இதன் ப்ரீமியம் ரக மாடலான எஸ்23 அல்ட்ரா 200 மெகாபிக்சல் பிரைமரி வைட் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர், 10 எம்பி ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 10 டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.
இத்துடன் எஸ் பென் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
*விலை நிலவரம்:
இதன் விலையை பொறுத்தவரை, எஸ்23 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.79,999 எனவும், எஸ்23 பிளஸ் மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.94,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அதன் டாப் எண்ட் வேரியன்டான எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,24,999 எனவும்
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,34,999 எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,54,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை உயர்நீதிமன்றநீதிபதிகள் நியமனம் சர்ச்சைகள்.
TELEGRAM: t.me/agnipuratchi1
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, அவசர விசாரணையாக உச்ச நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வைகை, அன்புக்குரிய நண்பர் அண்ணா மேத்யூ ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.
அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக விக்டோரியா கௌரி இருந்தார் என்பதே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதற்கான காரணம்.
இவ்வாறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
1.ஓமந்தூரார் சென்னை ராஜதானியில் பிரீமியராக (முதல்வர்) இருந்த காலத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஏ.அழகிரிசாமி அவருடைய ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்தான விமர்சனங்கள் எழுந்தன. அழகிரிசாமி எனது உறவினரும் கூட . நீதித்துறையைச் சேர்ந்த அவர் பின்னாள்களில் உச்ச நீதிமன்றம் வரை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தார். கோவில்பட்டி அருகே நாகம்பட்டியில் பிறந்தவர். இவர் சி.சுப்ரமணியத்தின் கல்லூரி கால வகுப்புத் தோழர். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர். காங்கிரஸ் அனுதாபி. நீதித்துறையில் இருந்த இவரை முதலமைச்சரின் ஆலோசகராக எப்படி நியமிக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது. அதுதான் முதலாவது சர்ச்சை.
2.அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் காலத்தில் நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னாட்களில் அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.
3. நீதிபதி எஸ்.ரத்னவேல் பாண்டியன் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் திமுகவின் மாவட்டச் செயலாளர். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது சர்ச்சைகளும் எழுந்தன. பின்னாட்களில் இவர் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதியாகச் சென்றார்.
4. நீதிபதி எஸ்.மோகன் திமுக அனுதாபி. அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் உண்டு.
5. நீதிபதி வேணுகோபால், திராவிட கழகத்தைச் சார்ந்த அபிமானி. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
6. சமீப நாட்களில் ராஜ இளங்கோ என்ற திமுக நிர்வாகி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் உண்டு. பின்னாட்களில் அவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பிலிருந்தார்.
7. நீதிபதி கற்பகவிநாயகம் அதிமுகவைச் சேர்ந்தவர். எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கியவர். அவரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.
8. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்த ப.சதாசிவம், அதிமுக அனுதாபி. அவரும் தொடக்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.
இவை எல்லாம் கடந்த கால நிகழ்வுகள்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் சர்ச்சைகள்.
https://indconlawphil.wordpress.com/2023/02/07/the-l-victoria-gowri-elevation-controversy-structural-issues-with-judicial-appointments/
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்
* ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், இந்தியாவின் தலைநகரான நியூ டெல்லியில் நிகழ்த்திய OnePlus Cloud 11 Event நிகழ்வில், புதிய ஒன்பிளஸ் 11R பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Budget smartphone) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை:
OnePlus 11R ஸ்மார்ட்போனின் 8GB + 128GB மாடலின் விலை ரூ.39,999
மற்றும் 16GB + 256GB மாடலின் விலை ரூ. 44,999 மட்டுமே.
OnePlus 11R ஸ்மார்ட்போனின் முன்பதிவு வரும் பிப்ரவரி 21, 2023 முதல் துவங்குகிறது.
இதன் முதல் அறிமுகம் விற்பனை இந்தியாவில் வரும் பிப்ரவரி 28, 2023 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது.
* டிமிட்ரி மெண்டெலீவ் பிறந்த தினம். ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.
இவர் வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப் படுத்த முயன்று, தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்.இதனை மார்ச் 6, 1869இல் ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார். கனிம அட்டவணையின் தந்தை என மெண்டெலீவ் அழைக்கப்படுகிறார். 8 பிப்ரவரி 1834ல் பிறந்தார்.
* சாகீர் உசேன் பிறந்த தினம். இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார்.
1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
இவர் கல்வித் துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிர்வாகியாகவும் விளங்கினார்.
இவர் பிப்ரவரி 8, 1897 ல் பிறந்தார்.
* பௌத்த சமயத்தில் பரிநிர்வாணம் என்ற சொல் முதலில் பயன் படுத்தப்பட்டது. பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும். புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
* ஜான் ரஸ்கின் விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையார் மற்றும் கொடை வள்ளல் ஆவார். கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 8 பிப்ரவரி 1819 ம் ஆண்டு பிறந்தார்.
* கன்னையாலால் மனேக்லால் முன்ஷி (கே. எம். முன்ஷி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற கல்வியாளர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர். பாரதீய வித்யா பவன் நிறுவனர் 1938, இவர் மறைந்த தினம் பிப்ரவரி 08. 1971.
* ரயில் பயணத்தை எளிமையும், இனிமையும் ஆக்கும் முத்தான 3 செயலிகள்!
அலுப்பில்லாமல் நீண்ட தூரம் பயணிக்க ரயில் பயணம் மிகவும் ஏற்றது.
பேருந்து மற்றும் விமானப் பயணங்களுடன் ஒப்பிடும் போது விலையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருக்கும். பலருக்கு ரயில்களின் நேர அட்டவணை, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது ஆகியவை பற்றி தெரிவதில்லை.
இதனாலேயே அவர்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதில்லை. ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள 3 செயலிகள் நமது பயணத்தை எளிமையானதாக்கும்.
Where is my train (எங்கே எனது ரயில்)
இந்த பெயரிலேயே ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் ரயில்வேயின் இச்செயலி கிடைக்கிறது. இந்திய ரயில்வேக்காக கூகுள் இச்செயலியை வடிவமைத்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 8 மொழிகளில் இச்செயலியை பயன்படுத்தலாம். நீங்கள் இருக்கும் ஊரிலிருந்து பயணிக்க உள்ள ஊருக்கு எப்போது ரயில் உள்ளது என்பதை இதில் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் இருக்கும் இடம் என சென்னை எழும்பூர் தந்துவிட்டு, செல்ல வேண்டிய இடத்தில் தஞ்சாவூர் அல்லது மதுரை அல்லது நெல்லை என குறிப்பிட்டால் எந்தெந்த நேரத்தில் என்ன வகையான ரயில்கள் உள்ளன என்ற பட்டியல் ஓடி வந்துவிடும். இன்டர்நெட் வசதியில்லையென்றாலும் வேலை செய்யும்.
இது தவிர இடைப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ளீர்கள் எனில், நீங்கள் எதிர்பார்க்கும் ரயில் தற்போது எங்கே வருகிறது என்பதை லைவாக காண முடியும். எந்த நிலையத்தை ரயில் கடந்தது என துல்லியமாக காட்டும்.
அதிவிரைவு ரயில்களுக்கு மட்டுமின்றி, புறநகர் ரயில்களைப் பற்றிய முழு தகவலும் இந்தச் செயலியில் உண்டு. இதை வைத்துக் கொண்டு நீங்கள் ஆல் இந்தியா பட்ஜெட் சுற்றுலாவுக்கே திட்டம் வகுக்கலாம். மேலும் பி.என்.ஆர்., எண்ணை தேடும் வசதி இதில் உள்ளது.
பதிவு செய்த இருக்கை, என்ஜினில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி உள்ளது, எங்கே அமைந்துள்ளது என அழகாக காட்டிவிடும். பதற்றமின்றி, யாரையும் கேட்க வேண்டிய அவசியமின்றி அழகாக பயணிக்கலாம். 10 கோடி பதிவிறக்கம் கண்டுள்ளது இச்செயலி.
IRCTC Rail Connect (ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனக்ட்)
இந்த செயலி மூலமாக தொலைதூர ரயில்களுக்கு டிக்கெட்களை எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ரயிலில் அமர்ந்தபடியே வெளியே உணவுகளை ஆர்டர் செய்து, நமது கோச்சிலேயே பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி விமான டிக்கெட்டுகள், பஸ் டிக்கெட்டுகள், சுற்றுலாப் பேக்கேஜ், ரயில் நிலைய ஓய்வறை ஆகியவற்றையும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முதலில் நமது மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, முகவரி போன்ற அடிப்படை தகவல்களை தந்து கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் காட்டப்படும் சேவைகளில் சென்று தேவையானவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தட்கல் மற்றும் ப்ரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் புக் செய்வது இதன் மூலம் எளிதானது. இது 5 கோடி பதிவிறக்கம் கண்டுள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
UTS (யு.டி.எஸ்.,)
இது முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் பதிவதற்கான பிரத்யேக செயலி.
ரயில் நிலையம் சென்று கடைசி நேரம் வரிசையில் பதைபதைப்புடன் காத்திருந்து டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு அடித்துப் பிடித்து பிளாட்பாரம் நோக்கி ஓட வேண்டியதில்லை. இருக்கும் இடத்திலிருந்துகொண்டே, அருகாமையில் ரயில் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்கான டிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம்.
போனில் சார்ஜ் மட்டும் முழுமையாக இருக்க வேண்டும். பரிசோதகர் கேட்கும் போது போன் ஆப் ஆகியிருந்தால் அபராதம் கட்ட நேரிடலாம்.
இந்த ஆப் ரயில் நிலையத்திலிருந்து 10 மீட்டர் வெளியே நின்றால் தான் வேலை செய்யும். ஏனென்றால் டிடிஆர் தலையைப் பார்த்தவுடன் வித்தவுட்கள் டிக்கெட் எடுத்து தப்பிக்கலாம் இல்லையா. எனவே ஜிபிஎஸ் மூலம் இந்த ஏற்பாடு.
* துருக்கியை உருக்குலைத்த பயங்கர நிலநடுக்கங்களின் வரலாறு
துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும்
ஏனெனில் இது அனடோலியன் தட்டில் அமர்ந்திருக்கிறது, இது யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது. ஒரு பெரிய பூகம்பம் இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர்
இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் பரவலான கட்டிடத்தை அனுமதித்துள்ளது. துருக்கி வரலாற்றில் மிக மோசமாக நிலநடுக்கம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஏற்பட்டது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகள் வரை பதிவானது. அதில் 17 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர். 2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 170 க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானது.
TELEGRAM: t.me/agnipuratchi1
2011ஆம் ஆண்டு 7.2, 5.8 மற்றும் 5.6 ரிக்டர் அளவுகளில் துருக்கி நகரங்களைத் தாக்கிய மூன்று நிலநடுக்கங்களில் 600 பேருக்கு மேல் உயிரிழந்தார்கள். 2020ஆம் ஆண்டில் 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் எல்சாயிக் நகரில் நிகழ்ந்தது. இதில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பூகம்பத்தால் கொல்லப்பட்டார். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது நடந்த துருக்கி, சிரியாவை சிதைத்த நிலநடுக்கம் - தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை
இதுவரை 8,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்
* ரசாயன கழிவு கலந்து செந்நிறமாக மாறிய ஓடை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மவுனம்
துாத்துக்குடி : துாத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுகளால், கோமஸ்புரம் உப்பாற்று ஓடை செந்நிறமாக மாறி ஓடுகிறது. எனினும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.
துாத்துக்குடி - மதுரை ரோட்டில் புதுார் பாண்டியாபுரம், கோமஸ்புரம் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மீன் பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன. மீன்களை கழுவ, பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துகின்றனர்.
அதிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர், கோமஸ்புரம் உப்பாற்று ஓடையில் செந்நிறமாக ஓடுகிறது. கடந்த மாதம் ஒரு விழாவிற்கு வந்திருந்த கலெக்டர் செந்தில்ராஜ், ஓடை செந்நிறமாக மாறியிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து விசாரிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது: மீன் பதப்படுத்தும் ஆலைகளில் கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் அதை கண்காணிப்பதில்லை. கலெக்டர் உத்தரவிட்ட பிறகும் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
நீர் மாசுபடுதல் தடுப்புச் சட்டம் 1974ன் படி கழிவுநீரை ஆற்றில் விடுவது குறித்து வழக்கு பதிவு செய்யலாம். இக்கழிவு நீர் செல்லும் ஓடையில் பல உப்பளங்கள் உள்ளன. அங்கு தயாரிக்கப்படும் உப்பு, உணவில் பயன்படுத்தும் போது பாதிப்பு ஏற்படுத்தும். கழிவுநீர் கடலில் கலந்தால் மீன்களுக்கும் விஷமாகும். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சத்யராஜ் பதிலளிக்க மறுத்தார். ஆனால், ஆலைக் கழிவுகளை ஓடையில் விட்டது தொடர்பாக நிலா சீ புட்ஸ், கிங் அகுவா, எஸ்.ஆர்.கே., ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.5,383-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
* வீடு, வாகனக் கடன் வட்டி உயர்கிறது! ரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிப்பு!!
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இதன் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்போ வட்டி விகிதம்) 6.25 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதையடுத்து அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்றும் உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் இந்திய பொருளாதாரமும் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வையடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி, நாட்டின் பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும்.
கடந்த 2022 மே முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதம் மொத்தமாக 2.5% வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை நிறைவு:
121 வேட்புமனுக்கள் பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 80 மனுக்கள் ஏற்பு - 41 மனுக்கள் நிராகரிப்பு.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமார் அறிவிப்பு.
* கடலூர்; குழந்தைகள் உட்பட 3 பேர் தீவைத்து கொலை.
கடலூர்: செல்லாங்குப்பம் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கொலை.
கொலை செய்தவரும் தீயில் கருகி உயிரிழப்பு; மேலும் இரண்டு பெண்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துமனையில் அனுமதி.
குடும்பத்தகராறு காரணமாக இந்த படுகொலை நடந்திருப்பதாக தகவல்.
* இனி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ்!
வீடியோ: https://youtu.be/uZAKqGHx-6Y
வாட்ஸ்ஆப்பில் 30 நொடிகள் வரை வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
குறுஞ்செய்தி, போட்டோ, விடியோ அனுப்புவதற்கும் ஆடியோ, விடியோ அழைப்புகளுக்கும் அதிகம் பயன்படுகிறது.
அந்நிறுவனமும் பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ் ஆப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் புதிய வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
போட்டோ, விடியோ மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. 30 நொடிகள் வரையிலான வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் அனைவரும் இந்த புதிய வசதியை பெறலாம்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* 10ஆம் வகுப்பு போதும்-ரூ.1லட்சத்தில் மத்திய அரசு வேலை ரெடி..!
எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Sub Inspector, Constable பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் - எல்லைப் பாதுகாப்புப் படை
பதவி - Sub Inspector, Constable
காலியிடங்கள் -30
கல்வித்தகுதி -10th, ITI, Diploma
சம்பளம் - ரூ.21,700 முதல் ரூ.1,12,400 வரை
வயது வரம்பு - 28-02-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30
பணியிடம் - இந்தியா முழுவதும்
தேர்வு முறை - உடல் தரநிலை சோதனை
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
இணையதள முகவரி - https://bsf.gov.in/
கடைசி தேதி -01 மார்ச்,2023
TELEGRAM: t.me/agnipuratchi1
* சபரிமலை நடை 12ம் தேதி திறப்பு : ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 12ம் தேதி திறக்கிறது,. 17ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
12ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.
இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 13–ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் தொடங்கும். தினமும் காலை 5:00 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும்.
மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 13 முதல் 17–ம் தேதி வரை தினமும் இரவு 7::00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 17–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* சிவில் முடித்தவர்களுக்கு வாய்ப்பு...
1083 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு மார்ச் 4 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 794
பணி:
இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 236
பணி:
இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்:
18
பணி:
வரைவாளர் நிலை.III
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400
பணி:
முதலாள்.நிலை.II
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி:
பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும். போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
1.7.2023 தேதியின்படி 32, 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
TELEGRAM: t.me/agnipuratchi1
அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கட்டணம்:
நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு மையம்:
சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in
ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.3.2023
* இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ ரெனோ8 டி!
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ, தனது ரெனோ8 டி5ஜி போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடலில், ஓப்போ நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஸ்பிளே, கேமரா, பேட்டரி உள்ளிட்ட ஹார்டுவேரை மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா, 56 டிகிரி ஸ்கிரீன் கர்வ், 171 கிராம் எடை, 6.7 இன்ச் அமோல்டு ஸ்கிரீன் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
மேலும், ‘ஏஐ அடாப்டிவ் ஐ ப்ரொடெக்ஷன் சிஸ்டம்’ இந்த போனில் உள்ளதால் நீண்ட நேரம் ஸ்கிரீனை கண்டால் ஏற்படும் சோர்வை தடுப்பதுடன் கண்களைப் பாதுகாக்கும் என ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில சிறப்பம்சங்கள்..
2 எம்பி டெப்த்-சென்சிங் லென்ஸுடன் 108எம்பி மெயின் கேமரா
8ஜிபி ரேம் மற்றும் கூடுதலாக 8ஜிபி ரேம் விரிவாக்கம் செய்யும் தொழில்நுட்பம் 128 ஸ்டோரேஜ், 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ்
4800 எம்ஏஎச் பேட்டரி(40 நிமிடத்தில் 100 சதவிகிதம் சார்ஜ் ஏறும் தொழில்நுட்பம்)
மேலும், இத்துடன் என்கோ ஏர்3 இயர்பட்ஸையும் இந்தியாவில் ஓப்போ நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்திய மதிப்பின்படி, ஓப்போ ரெனோ8 டி5ஜி ஸ்மார்ட் போன் ரூ.29,999-க்கும், என்கோ ஏர்3 இயர்பட்ஸ் ரூ.2,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஃபிளிப்கார்ட், ஓப்போ ஸ்டோர் மற்றும் முன்னணி ஸ்மார்ட்போன் கடைகளில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* ரூ.71,900 சம்பளத்தில் சாலை ஆய்வாளர் வேலை:
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மர்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு வரும் 11 ஆம் தேதிக்குள் தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
காலியிடங்கள்: 761
சம்பளம்:
மாதம் ரூ.19,500 - 71,900
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் சிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும், சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குப்படும்.
வயதுவரம்பு: 01.07.2023 தேதியின்படி கணக்கிடப்படும். ஆதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியர்), பட்டியலின பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்( இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதோர்) மற்றும் அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பில்லை. ஏனைய வகுப்பினைச் சாராதவர்கள் முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்:
நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
எழுத்துத் தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண் ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in
ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2023
வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க...
* தமிழ்நாடு அரசின் ரூ.56,100 சம்பளத்தில் சுற்றுலா அலுவலர் வேலை!
தமிழ்நாடு பொதுப் பணியில் சுற்றுலா அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு, தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: சுற்றுலா அலுவலர்
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
வயதுவரம்பு:
01.07.2023 தேதியின்படி கணக்கிடப்படும்.
ஆதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியர்), பட்டியலின பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்( இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதோர்) மற்றும் அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு வயதுவரம்பில்லை.
ஏனைய வகுப்பினைச் சாராதவர்கள் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் முதுகலை பட்டம் அல்லது சுற்றுலாத் துறையை ஒரு பாடத்துடன் கூடிய ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் அல்லது சுற்றுலாத் துறையில் எம்.பில் முடித்தவர்கள் அல்லது சுற்றுலாத்துறையில் டிப்ளமோ முடித்து ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினிக்கான சான்றிதழ் படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வி மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும். சுற்றுலாத் துறையில் எம்பிஏ முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கட்டணம்:
நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னை மையத்தில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண் ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in
ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2023
TELEGRAM: t.me/agnipuratchi1
* அரசு நூலகங்களில் வேலை வேண்டுமா?
TNPSC புதிய அறிவிப்பு!
ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 35 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாளாகும். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரியில் நூலகர் 8 இடங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் 1 இடம், மாவட்ட நூலக அலுவலர் 3 இடங்கள் என 12 இடங்கள். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.
மேற்கண்ட பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.57,700 - 2,11,500, ரூ.56,100 - 2,08,700, ரூ.56,100 - 2,05,700 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பொதுத் துறையின் கீழ் தலைமைச் செயலக நூலகம் நூலக உதவியாளர் 2 இடங்கள், பொது நூலக துறையில் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் 21 இடங்கள் என 23 இடங்கள். இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
மேற்கண்ட பதவிகளுக்கு மாதம் ரூ.35,400 - 1,30,400, ரூ.19,500 - 71,900 சம்பளமாக வழங்கப்படும்.
நூலகத் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்திருப்பவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேற்கண்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின்
www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மார்ச் 6 ஆம் தேதி வரை நள்ளிரவு 12.1 மணி முதல் மார்ச் 8 ஆம் தேதி இரவு 11.59 வரை திருத்தம் செய்யலாம்.
TELEGRAM: t.me/agnipuratchi1
மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மே 13 ஆம் தேதி காலை முதல் தாள் தேர்வும், பிற்பகல் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும்.
எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும்.
* வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...
இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு!
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமின் டாக் சேவா(கிராமிய தபால் ஊழியர்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Branch Postmaster (BPM)
சம்பளம்:
மாதம் ரூ.12,000 - 29,380
பணி: Assistant Branch Postmaster (ABPM)
பணி:
Gramin Dak Sevaks (GDS)
சம்பளம்:
மாதம் ரூ.10,000 - 24,470
மொத்த காலியிடங்கள்: 40,889.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதி:
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.indiapostgdsonline.gov.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.2.2023
TELEGRAM: t.me/agnipuratchi1
No comments:
Post a Comment