மரம் நடும் அறமே, மாபெரும் அறம்:
இரண்டாம் ஆண்டில் 93 நாட்களில்
4657 மரக்கன்றுகளை நட்ட பாட்டாளி சொந்தங்கள்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் 2021-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கினார்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் இணை, சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் மரம் நட வேண்டும். அவ்வாறு மரம் நட்டவர்கள் அதன் புகைப்படத்தை மருத்துவர் அய்யா அவர்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புபவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 2021 நவம்பர் 30-ஆம் தேதி முதல் 2022 நவம்பர் 29-ஆம் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில் மொத்தம் 302 நாட்களில் 2551 பேர் மொத்தம் 20,827 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். பல பாட்டாளிகள் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். சிங்கப்பூர், மலேஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் பலர் மரக்கன்றுகளை நட்டு, அதற்காக மருத்துவர் அய்யா அவர்களிடம் வாழ்த்து பெற்றிருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் நாள் தொடங்கிய இரண்டாம் ஆண்டில் மார்ச் 21-ஆம் நாள் வரையிலான 112 நாட்களில், 93 நாட்கள் மட்டும் மருத்துவர் அய்யா அவர்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாளையொட்டி மரக்கன்று நட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்த 93 நாட்களில் மொத்தம் 465 பேர் 4657 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தமிழைத்தேடி பயணம் மற்றும் அதன் பின் மருத்துவர் அய்யா அவர்கள் ஓய்வெடுத்த காலம் என பிப்ரவரி 21 முதல் மார்ச் 11 வரையிலான 19 நாட்கள் மட்டும் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அந்த நாட்களில் பலரும் மரக்கன்றுகளை நட்டனர். ஆனால், அது இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.
No comments:
Post a Comment