கடைகளின் பெயர்ப்பலகைகளை விதிகளின்படி தமிழை முதன்மைப்படுத்தி அமைப்பது எப்படி? என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவிடம்
ஆர்வத்துடன் கேட்டறிந்த இந்தி பேசும் வணிகர்!
சென்னை தியாகராயர் நகர், சவுந்தரபாண்டியனார் அங்காடி பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், மேலாளர்களை சந்தித்த நான், அவர்களின் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழ்நாடு அரசாணையின்படி தமிழை முதன்மைப்படுத்தி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அது தொடர்பான துண்டறிக்கைகளையும் வழங்கினேன்.
அங்குள்ள பூனம் உள்ளாடையகம் ( Poonam in-wear store) என்ற கடைக்கும் சென்றேன். அந்த கடையின் உரிமையாளர் பெயர் விவேக். அவரின் கடையின் பெயர் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளிலும், தமிழில் சிறிய எழுத்துகளிலும் எழுதப்பட்டிருந்தது. அதை கடையின் உரிமையாளர் விவேக்கிடம் சுட்டிக்காட்டிய நான், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி அவரது கடையின் பெயர்ப்பலகையை தமிழை முதன்மைப்படுத்தி அமைக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
அதுமட்டுமின்றி, ஒரு வெள்ளைத் தாளை எடுத்து அதை தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு 5:3:2 என்ற அளவில் பிரித்துக் காட்டி 5 பங்கு அளவில் தமிழிலும், 3 பங்கு அளவில் ஆங்கிலத்திலும் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். தொடர்ந்து அவரது தாய்மொழி என்னவென்று கேட்டேன். தமது தாய்மொழி இந்தி என்று விவேக் கூறினார். அப்படியானால், பெயர்ப்பலகையில் மீதமுள்ள 2 பங்கு அளவில் உங்கள் கடையின் பெயரை இந்தியிலும் கூட எழுதலாம் என்று கூறினேன். அதை ஆர்வத்துடன் கேட்ட விவேக் நான் கூறியதைப் போலவே பெயர்ப்பலகையை மாற்றியமைப்பதாக உறுதியளித்தார்.
அவருக்கு வாழ்த்து கூறி விடை பெற்று சென்றார் மருத்துவர் இராமதாசு அய்யா.
No comments:
Post a Comment