தமிழ்நாடு முழுவதும் தனித்தமிழ் சொற்கள் அறிவோம் பதாகைகள் மிளிரட்டும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

தமிழ்நாடு முழுவதும் தனித்தமிழ் சொற்கள் அறிவோம் பதாகைகள் மிளிரட்டும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

தமிழ்நாடு முழுவதும் தனித்தமிழ் சொற்கள் அறிவோம் பதாகைகள் மிளிரட்டும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா

அன்னைத் தமிழை வளர்க்கும் நோக்குடன் தமிழ்நாடு முழுவதும் தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பிலான  பதாகைகளை அமைக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சியினரை கேட்டுக் கொண்டிருந்தேன்.  சென்னை தியாகராயநகர் சவுந்தரபாண்டியனார் அங்காடி பகுதியில்  அமைக்கப்பட்டிருந்த முதலாவது பதாகையை இன்று காலை நான் திறந்து வைத்தேன். அதேபோல், கடைகளில் தனித்தமிழில் பெயர்ப்பலகைகளை அமைக்கக் கோரும் துண்டறிக்கைகளை  வழங்கினேன். 

இந்த மாற்றங்கள்  சென்னையில் மட்டுமே நிகழ வேண்டியவை அல்ல. தமிழ்நாடு முழுவதும் இந்த மாற்றங்கள் நிகழ வேண்டும். அதற்காக மாநிலம் முழுவதும் மக்கள் கூடும் இடங்கள், கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில்  தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பிலான  பதாகைகள் அமைக்கப்பட வேண்டும்.  தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் அத்தகைய பதாகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க. பொறுப்பாளர்கள் அத்தகைய பதாகைகளை தங்களின் பகுதியில் அமைக்க வேண்டும். அந்த பதாகைகளின் திறப்பு நிகழ்வை அனைவரும் அறியும் வகையில் எளிதாக நடத்த வேண்டும்.  அந்த பதாகைகளில் உங்களின் பெயர்கள் மற்றும் நிழற்படங்களையும் அச்சிட்டுக் கொள்ளலாம்.

அதேபோல்,  ஒவ்வொரு ஊரிலும் வணிகர்களுக்கு வழங்குவதற்கான துண்டறிக்கை கட்சித் தலைமையால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதை ஒவ்வொரு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூருக்கு தேவையான எண்ணிக்கையில் அச்சிட்டு, ஒவ்வொரு கடைக்கும் சென்று வழங்க வேண்டும்; பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க வேண்டியதன் தேவை பற்றி விளக்க வேண்டும். அது குறித்த விவரங்களை  என்னிடமே நீங்கள் தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages