மனிதர்களை மட்டுமின்றி, உலகின் அனைத்து உயிரினங்களையும் மதித்த மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் சமண மத சகோதரர், சகோதரிகளுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சரியான நம்பிக்கை, சரியான அறிவு, சரியான நடத்தை ஆகியவை தான் மனிதனை பாவச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்கிறது என்பது மகாவீரரின் போதனை ஆகும். வன்முறை தவிர்த்தல், வாய்மை, திருடாமை, இல்லற துறவு, பற்றற்றிருத்தல் ஆகியவற்றை கடைபிடிப்பதாக அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்பது தான் சமணர்களுக்கு அவர் விதித்த கட்டுப்பாடு ஆகும். இவை தான் நன்னடத்தை ஆகும் என்றும், நன்னடத்தையும் வாழ்வோருக்கு எந்த தீமையும் ஏற்படாது என்று மகாவீரர் வலியுறுத்தினார். அதையே வாழ்நாள் முழுவதும் மகாவீரர் பின்பற்றினார்.
எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து காட்டிய மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில், அவரின் போதனைகளை பின்பற்றி வாழவும், அவர் விரும்பியவாறு மது இல்லாத உலகம், அன்பு நிறைந்த மக்களை உருவாக்கவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
No comments:
Post a Comment