துறவறத்தின் அடையாளமாக போற்றப்படும் மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் சமண மத சகோதரர், சகோதரிகள் அனைவருக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல... மனிதர்கள் பின்பற்ற வேண்டிய பாடம். ஆசைப்பட்டதை எல்லாம் அடைந்து விட வேண்டும் என்பதற்காக ஓடும் உலக மக்கள், அதற்காக என்னென்னவற்றை எல்லாம் இழக்கிறோம் என்பதை இன்றைய உலகில் காண்கிறோம். ஆனால், மகாவீரரோ, இதையெல்லாம் உணர்ந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சிப் பொறுப்பையே வீசி எறிந்து துறவறம் பூண்டவர்.
மகாவீரரின் வாழ்க்கையை மனிதகுலம் முழுமையும் கடைபிடித்தால் உலகம் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் நிறைந்த, இல்லாமை என்பதே இல்லாததாகவும் மாறும். அந்த இலக்கை அடைவது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காக ஆசையில்லாத, எவருக்கும் துன்பம் ஏற்படுத்தாத மகாவீரரின் வாழ்க்கை முறையை கடைபிடிக்க அவரது நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
No comments:
Post a Comment