செழித்து வளரத் தொடங்கியுள்ள
பணம் காய்க்கும் 14 வகை மரங்கள்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மகிழ்ச்சி.
திண்டிவனத்தையடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக் கோயிலில் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் 14 வகையான மரக்கன்றுகள் எனது மேற்பார்வையில் நடப்பட்டு வருவது குறித்து இப்பகுதியில் நான் பகிர்ந்து கொண்டிருந்தேன். மொத்தமாக 5500 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பது எனது நோக்கம். முதல் கட்டமாக 4200 மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக மேலும் 1300 மரக்கன்றுகளும், மூன்றாம் கட்டமாக 2000 மரக்கன்றுகளும் நடப்பட்டன. எனது இலக்கையும் கடந்து மொத்தமாக 7500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
அந்த மரக்கன்றுகள் இப்போது தழைத்து வளரத் தொடங்கியுள்ளன. அந்த 14 வகை மரங்களில் நாவல் தவிர்த்து மீதமுள்ள 13 வகையான மரங்கள் அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் காய்ப்பவை; அதாவது வளர்ப்பவர்களுக்கு பெரும் இலாபத்தைத் தரக்கூடியவை.
14-ஆம் வகை மரமான நாவல் மரம் மட்டும் பணம் காய்க்காது. மாறாக பழம் காய்க்கும். அது இதய நோய் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
மரங்களின் வகைகள்:
1. நீர்மருது
2. மகாகனி
3. பூவரசு
4. சில்வர் ஓக்
5. இலுப்பை
6. வேங்கை
7. செம்மரம்
8. குமிழ் தேக்கு
9. வெண்கடம்பு
10. மலைவேம்பு
11. ரோஸ் வுட் ( Rose Wood )
12. மூங்கில்
13. தீக்குச்சி மரங்கள்
14. நாவல் - இது பழம் காய்க்கும்
பணம் காய்க்காது.
மரம் வளர்க்கும் அறமே மாபெரும் அறம்!
No comments:
Post a Comment