தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் - Agnipuratchi

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்

Share This
* தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்

* காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கல்.

மாபெரும் கலைஞன், மக்கள் நாயகன், பொன் நெஞ்சம் கொண்ட மனிதரான ‘கேப்டன்’ விஜயகாந்த் என்றென்றும் மரியாதையுடனும், போற்றுதலுடனும் நினைவுகூரப்படுவார்.

அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த மற்றும் நம்பிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்: பிரியங்கா காந்தி இரங்கல்

* திரைப்படங்கள் மூலம் தேசபக்தியை ஊட்டியவர்: கேப்டன் விஜயகாந்த் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்

தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி: அமித் ஷா இரங்கல்

* தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது

சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய  பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

• விரைவு செய்திக்கு அக்னிப்புரட்சி • வாட்ஸ்அப்! சேனலை பார்க்கவும்.
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20

* திரைப்பட நடிகரும். தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகஉள்ளது;

தனது திரைப்படங்கள் மூலம், புரட்சிகரமான கருத்துக்களையும் நாட்டுப் பற்றையும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த்;

இதற்காக இந்திய அரசின் சிறந்த குடிமகனுக்கான விருதையும் பெற்றவர்;தனது நடிப்பிற்காக கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், ரசிகர்களால் கேப்டன் என்று பெருமையோடு அழைக்கப்படுவதையே பெரும் விருதாகக் கருதினார்;

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கியவர், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் வெற்றிகரமான தலைவராக முத்திரை பதித்தவர்;

தனக்கு சரியென்று பட்டதை தைரியமாக வெளிப்படையாகச் சொல்லும் போக்கு எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதராகவே அவரை உலகிற்கு அடையாளப் படுத்தியுள்ளது;

சினிமா, அரசியல் என ஒரு தனி மனிதராக அவர் சாதித்தவை உழைப்பை ஊன்றுகோலாகக் கொண்டவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்;

விஜயகாந்த்-ன் இழப்பு திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்;

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்”
- புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி இரங்கல்

• விரைவு செய்திக்கு அக்னிப்புரட்சி  வாட்ஸ்அப்! சேனலை பார்க்கவும்.
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20

* விஜயகாந்த் மறைவு - நிர்மலா சீதாராமன் இரங்கல்

"தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்"

"விஜயகாந்த் அவர்களை ‘பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம்"

"அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" - நிர்மலா சீதாராமன்

* படப்பிடிப்பு முடிந்து வந்து வராண்டாவில் படுத்துக்கொள்வார்"

"தமிழக அரசியலில்  எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான
ஒரு தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர்"

'லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்த வராண்டாவில் படுத்துக்கொள்வார்"

"புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது

சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - சிவகுமார்

* விஜயகாந்த் மறைவு - கமல் இரங்கல்

"தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இரங்கல்"

"தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்தின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது"

"எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர்..எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது"

"அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்"

விரைவு செய்திக்கு அக்னிப்புரட்சி • வாட்ஸ்அப்! சேனலை பார்க்கவும்.
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages