சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தலைமையில் 29.12.2023 இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியும், வன்னியர்களுக்கு 10.5% விழுக்காடு இட ஒதுக்கீடு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் விளக்கமாக பேசியும் அதற்கான கடிதத்தை மருத்துவர் இராமதாசு அய்யா வழங்கினார். மேலும் இது இட ஒதுக்கீடு சம்பந்தமாக நீண்டநேரம் வலியுறுத்தி முதலமைச்சரிடம் கூறினார். அப்போது மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதிஸ்டாலின், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி,MLA, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் MLA, இரா.அருள் MLA, சதாசிவம் MLA. அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா IAS, முதலமைச்சர் செயலாளர்கள் முருகானந்தம் IAS, சண்முகம் IAS மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இடஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா!
No comments:
Post a Comment