டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பு… - Agnipuratchi

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பு…

Share This
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பு…

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது!

மக்களவைத் தேர்தலில் 98.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்-ராஜீவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர்

நேரலை: https://www.youtube.com/live/-DR8x-uCB-k?si=CBCgktzsnZgukAJD

ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, மூன்றாம் பாலினம் - 48,044 பேர் உள்ளனர்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் -தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

• அக்னிப்புரட்சி வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20

BREAKING: நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

நேரலை: https://www.youtube.com/live/-DR8x-uCB-k?si=CBCgktzsnZgukAJD

மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கம், அருணாச்சல், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல்

100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.8 கோடி முதல்முறை வாக்காளர்கள், மக்களவை தேர்தலில் பங்கேற்க உள்ளனர் -தேர்தல் ஆணையர்

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் சேர இன்றைய இளம்தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்களில் 85.3 லட்சம் பேர் பெண்கள் ஆவர் -தலைமைத் தேர்தல் ஆணையர்

ஏப்.1-ம் தேதி வரை 18 வயது எட்டுபவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம் -தலைமைத் தேர்தல் ஆணையர்

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் -தலைமைத் தேர்தல் ஆணையர்

நேரலை: https://www.youtube.com/live/-DR8x-uCB-k?si=CBCgktzsnZgukAJD

சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் - தலைமைத் தேர்தல் ஆணையர்.

ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும்.

தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது.

மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை.

முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும் -தலைமைத் தேர்தல் ஆணையர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages