செயற்கை சுவாசக்கருவியின்றி சுவாசித்தார் குரு - Agnipuratchi

செயற்கை சுவாசக்கருவியின்றி சுவாசித்தார் குரு

Share This

குரு உடல்நிலையில் முன்னேற்றம்:செயற்கை சுவாசக்கருவியின்றி சுவாசித்தார்!

பா.ம.க. தலைமை நிலைய பத்திரிகை செய்திக்குறிப்பில்  உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவீரன்  குரு அவர்களை பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் ஒவ்வொரு நாளும் பார்த்து, உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.

மாவீரன் குரு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாளில் இருந்தே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சுவாசக்கருவி இல்லாமல் சுவாசிக்க வைக்கும் முயற்சியில்  மருத்துவர்கள் இன்று ஈடுபட்டனர். அதற்கு நல்ல பயன் கிடைத்தது. சுமார் 2 மணி நேரம் சுவாசக் கருவி இல்லாமல் மாவீரன் குரு அவர்கள் சுவாசித்தார். இந்நடைமுறைகளின் போது பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், மாவீரன் குரு குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

அவரது உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட மருத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர இருதய நோய் சிகிச்சை வல்லுனர் சாய் சதீஷ், பல்துறை தீவிர சிகிச்சைப்பிரிவின் மூத்த மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன், பல்துறை தீவிர சிகிச்சைப்பிரிவின் பொறுப்பு மருத்துவர் பரத், நுரையீரல் சிகிச்சைப்பிரிவு மூத்த மருத்துவர் எல். சுந்தரராஜன், மூத்த மருத்துவர் வெங்கடாச்சலம், சிறுநீரக அறுவை சிகிச்சையியல் மருத்துவர் ஜெய கணேஷ், மூத்த மருத்துவர் நல்லி யுவராஜ் ஆகிய மருத்துவர்கள் அடங்கிய குழு ஆலோசனை நடத்தியது. இதில்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் பங்கேற்றார். ஆலோசனையின் அடிப்படையில் மாவீரன் குரு அவர்களுக்கு  மூத்த மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages