தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களில், செல்வசேகர் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் மறுகூறாய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.  - Agnipuratchi

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களில், செல்வசேகர் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் மறுகூறாய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

Share This

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களில், செல்வசேகர் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் மறுகூறாய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூத்துக்குடி துப்பாக்கிசூடு வன்முறை வெறியாட்டத்தில், குண்டு பாய்ந்து உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடல்கள் நேற்று மறுகூராய்வு செய்யப்பட்டன. இதில் இருளப்புரத்தை சேர்த்த செல்வசேகர், கால்டுவெல் காலனியை சேர்த்த கார்த்திக் மற்றும் தாமோதர நகரைச் சேர்ந்த சண்முகம் ஆகிய 3 பேரின் உடல்கள் மறுகூராய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதில் மாணவி ஸ்னோலினின் உடலில் குண்டடி காயம் இல்லை என உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்ததால், அவரது உடலை வாங்க பெற்றோர் மறுத்துவிட்டனர். துப்பாக்கிச் சூட்டால் பலியான 13 பேரில் 3 பேர் உடல்கள் மட்டுமே அவரவரின் உறவினர் களிடம் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே தூத்துக்குடியில் புதிதாக 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், வீதிவீதியாக சென்று கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பீதியின் பிடியில் தூத்துக்குடி மாநகரைச் சேர்ந்த மக்கள் சிக்கியுள்ளனர். ஆனால் முறையான ஆவணமின்றி யாரையும் கைது செய்ய தடைவிதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages