தமிழகத்தில் பள்ளி இறுதித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதியுடன் முடிவடைந்தன. அதன் பின்னர் மாணவர் களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஏறத்தாழ ஒன்றரை மாத விடுமுறை, நேற்றுடன் முடிவடைந்து, பள்ளிகள் இன்று மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. வெயில் இன்னும் அதிகமாக உள்ளதால் விடுமுறை தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தமிழக அரசின் ஆணைப்படி பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இன்றே வழங்குமாறு பள்ளிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளன. பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அரசுப்பள்ளிகள் மட்டுமே இன்று திறக்கப் பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் வெவ்வேறு தேதிகளில் திறக்கப்பட உள்ளன.
கோடை விடுமுறைக்குப் பின் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
Share This
Tags
# கல்வி
Share This
About agnipuratchi@gmail
கல்வி
Labels:
கல்வி
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment