சி.பி.எஸ். சி - தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. - Agnipuratchi

சி.பி.எஸ். சி - தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

Share This

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காசியாபாத் மாணவி நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், நாடு முழுவதும் தேர்வெழுதியவர்களில் 83 புள்ளி ஒரு விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவிகள் 88 புள்ளி மூன்று ஒன்று விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்கள் 78 புள்ளி ஒன்பது ஒன்பது விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். காசியாபாத் மாணவி மேக்னா ஸ்ரீவஸ்தவா ஐநூறுக்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். உத்தரப்பிரதேச மாணவி அனுஷ்கா சந்திரா 498 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.  தேர்ச்சி விழுக்காட்டில் திருவனந்தபுரம் மண்டலம் 97 புள்ளி 32 விழுக்காடு பெற்று முதலிடமும், 93 புள்ளி 87 விழுக்காடு பெற்று சென்னை மண்டலம் இரண்டாம் இடமும் பிடித்துள்ளன. டெல்லி மண்டலம் 89 விழுக்காடு தேர்ச்சி பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages