விளாத்திக்குளத்தில் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்களை காக்கை, குருவிகள் போல் காவல்துறை சுட்டு வீழ்த்தியது. இதில் 13 பேர் செத்து மடிந்ததால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பி வந்தநிலையில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. விளாத்திக்குளம் அருகே கொளத்தூர் காவல்நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச்சென்றுள்ளனர். இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டை வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் நாளை வரை 144 தடையானை பிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தூத்துக்குடி தூப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட்ட புரட்சிகர இளைஞர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment