ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்இணைப்பு துண்டிப்பு! - Agnipuratchi

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்இணைப்பு துண்டிப்பு!

Share This


மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.   
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் எழுச்சி மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். நேற்று மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மேலும் ஒருவர் பலியானார். நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்இணைப்பை துண்டிக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்ததை அடுத்து, மின்சார வாரியம் மின் இணைப்பைத் துண்டித்துள்ளது. 33 ஏ நீர் மாசு தடுப்புச்சட்டம் மற்றும் 31 ஏ காற்று மாசு தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர் களை நேற்று சந்தித்து ஆறுதல்கூறிய தலைவர்கள் மீது தூத்துக்குடி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 144 தடை ஆணை நடைமுறையில் இருக்கும்போது, அதனை மீறி மருத்துவமனைக்குச் சென்றது உட்பட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.     

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages