எம்.ஜி.எம் குழுமத்தின் நிறுவனர் எம்.ஜி.முத்து சென்னையில் காலமானார் - Agnipuratchi

எம்.ஜி.எம் குழுமத்தின் நிறுவனர் எம்.ஜி.முத்து சென்னையில் காலமானார்

Share This

எம்ஜிஎம் குழுமத்தின் நிறுவனர் எம்.ஜி.முத்து சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற எம்ஜிஎம் பொழுபோக்கு பூங்காவை நிறுவிய எம்ஜிமுத்து, கன்னியாகுமரி மாவட்டம், திசையன்விளையில் பிறந்தவர். எம்ஜிஎம் குழுமத்தின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொழில் நிறுவனங்களை இவர் நடத்தி வந்தார். சென்னை அபிராமபுரத்தில் நேற்று மாலை அவர் மாரடைப்பால் காலமானார். வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் எம்ஜிஎம் குழும நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் இன்று மாலை அவரது உடல் எரியூட்டப்படவிருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages