வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. - Agnipuratchi

வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Share This


வன்னியர் சங்கத்தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மாவீரன் ஜெ.குரு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜெ.குருவின் சொந்த மாவட்டமான அரியலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளையும் அடைத்து வணிகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் கடைகள் திறக்கப்படவில்லை. கும்பகோணம் பகுதியில் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், சோழபுரம், திருநாகேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை பகுதியில் குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட இடங்களில் வணிகர்கள் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தினர்.  காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் ஜெ.குருவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, ஆரணி,போளூர்,வந்தவாசி மற்றும் மங்கலம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாவீரன் குரு மறைவையொட்டி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages