மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் மகாதிர் முகமதுவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி ஐந்து நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு பிரதமர் மகாதிர் முகமதுவைச் சந்தித்துப் பேசினார். இதில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, வர்தகம் மற்றும் முதல¦டுகளை அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மலேசிய பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக நன்றி எனவும் பிரதமர் மோடி டுவிடரில் பதிவிட்டுள்ளார். இந்திய மலேசிய உறவை வலுப்படுத்த ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment