ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிதி முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யின் அடிப்படையில், இன்று விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு நடுவண் புலனாய்வுத்துறை அறிவிக்கை அனுப்பியது. விசார ணைக்கு பிறகு தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்பிணை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜூன் 3ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய நடுவண் புலனாய்வுத்துறைக்கு தடை விதித் தது. முன்னதாக, அமலாக்கப்பிரிவு அழைப்பாணையை ஏற்று ஜூன் 5ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்றும் ப.சிதம்பரத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதுவரை ப.சிதம்பரத்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், விசாரணை தொடர்பான நிலை அறிக் கையை நீதிமனறத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அமலாக்கப்பிரிவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி ஆணையிட்டுள்ளார்.
No comments:
Post a Comment