அத்தியாவசிய பொருட்கள் மீது அரசு அதிக வரி வசூலிப்பது வழிப்பறிக்கு இணையான செயல் என மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவை பின்பற்றி பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். - Agnipuratchi

அத்தியாவசிய பொருட்கள் மீது அரசு அதிக வரி வசூலிப்பது வழிப்பறிக்கு இணையான செயல் என மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவை பின்பற்றி பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல்- டீசல் மீதான விற்பனை வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு ஆணையிட்டிருப்பது மிகச்சரியான முடிவு என கூறியுள்ளார்.

சென்னையில் இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81 ரூபாய் 35 காசுகளாகவும், டீசல் விலை 73 ரூபாய் 12 காசுகளாகவும் உள்ளது. கச்சா எண் ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, தினமும் சராசரியாக லிட்டருக்கு 30 காசுகள் வரை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், விலையை குறைக்கும் போது மட்டும் லிட்டருக்கு ஒரு காசு, 5 காசு, 7 காசு என கஞ்சத்தனம் காட்டு கின்றன. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கலால் வரியை உயர்த்திய நடுவண் அரசு, அதை இப்போது குறைக்க வேண்டுமென விடுக்கப்படும் வேண்டுகோள்களை புறக்கணிக்கிறது. இத்தகைய சூழலில் நடுவண் அரசுக்கும், பிற மாநில அரசுகளுக்கும் வழிகாட்டும் வகையில் கேரள அரசு விற்பனை வரியை குறைத்திருக்கிறது. கேரள அரசிடம் இருந்து தமி ழக அரசு பாடம் கற்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி தமிழகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 27ல் இருந்து 34 விழுக்கா டாகவும், டீசல் மீதான விற்பனை வரி 21 புள்ளி 43 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக மராட்டியம், மத்தியப் பிர தேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வரி வசூலிக்கும் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள் ளது. தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19 ரூபாய் 66 காசுகள் விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது. நடுவண் அரசு வசூலிக்கும் 19 ரூபாய் 48 காசு கள் கலால் வரியில் மாநில அரசின் பங்காக கிடைக்கும் 8 ரூபாய் 18 காசுகளை யும் சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் தமிழக அரசுக்கு 27 ரூபாய் 84 காசுகள் வருமானம் கிடைக்கிறது. அதேபோல், டீசல் விற்பனையில் விற்பனை வரியாக 12 ரூபாய், நடுவண் அரசின் கலால் வரி வருவாயில் மாநில அரசின் பங்காக 6 ரூபாய் 45 காசுகள் என 18 ரூபாய் 45 காசுகள் வருமானம் கிடைக் கிறது. தமிழக அரசின் வரி வருவாயில் பெரும் பகுதி மது விற்பனை மற்றும் எரி பொருள் விற்பனை மூலம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு மாநில அரசு அதன் செலவு களுக்காக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீது அதிகவரி வசூலிப்பது வழிப்பறிக்கு இணையான செயல். தமிழகத்தில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட விற்பனை வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை லிட்ட ருக்கு 4 ரூபாய் 31 காசுகள் குறையும். அதேபோல் டீசல் விலை 2 ரூபாய் 10 காசுகள் குறையும். இந்த விலை குறைப்பால்  தமிழக அரசுக்கு பெட்ரோல், டீசல் விலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரிய அளவில் எந்த இழப்பும் ஏற்படாது. நடுவண் அரசைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19 ரூபாய் 48 காசுகள், ஒரு லிட்டர் டீசலுக்கு 15 ரூபாய் 33 காசுகள் வீதம் கலால் வரி வசூலிக் கிறது. இதன் மூலமாக மட்டும் நடுவண் அரசுக்கு ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. அதில் ஒருபகுதியை மக்களுக் காக விட்டுத் தருவதன் மூலம் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தாங்க முடியாத சுமையை நடுவண்- மாநில அரசுகள் குறைக்க வேண்டும். வரிக் குறைப்பு மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை முறையே 70 ரூபாய் மற்றும் 60 ரூபாய்க்கு கீழ் குறைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages