பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங் குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், உலாந்தி உள்ளிட்ட வனச்சரகங்களில் 62 நேர்கோட்டுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விலங்குகளின்¢ கால்தடம், எச்சம் உள்ளிட்டவற்றை கண்காணித்து கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் 42 குழுக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக கைப்பேசி செயலி மூலம் வனவிலங்குளை கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment