தமிழகம் - குடிநீருக்காக போராட்டம் - Agnipuratchi

தமிழகம் - குடிநீருக்காக போராட்டம்

Share This


குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தென்காசி நகராட்சி அலுவலகத் தில் பொதுமக்கள் படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 5வது வட்டத்தில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இத னைக் கண்டித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை அங்கிருந்து நகரப் போவதில்லை என்று கூறி அலுவலக வாயிலில் பாய் விரித்து படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல கம்பத்தில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் பொது மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை யினர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages