பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கட்டுப்படுத்த கேரள அரசின் நடவடிக் கையை மாநில அரசுகள் பின்பற்றுமாறு நடுவணமைச்சர் தர்மேந்திரபிரதான் வலியுறுத்தியுள்ளார். - Agnipuratchi

பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கட்டுப்படுத்த கேரள அரசின் நடவடிக் கையை மாநில அரசுகள் பின்பற்றுமாறு நடுவணமைச்சர் தர்மேந்திரபிரதான் வலியுறுத்தியுள்ளார்.

Share This

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 16  நாட்களில் நான்கு ரூபாய் உயர்ந்து, தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கின்றன. இதனால் விலை யைக் கட்டுப்படுத்தக்கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. ஆனால், இதனைக் கண்டுகொள்ளாத நடுவணரசு, விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான நிரந்தர தீர்வு குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைப்பதாக கேரள அரசு அதிரடியாக அறிவித்தது. இதனை வரவேற்ற தர்மேந்திர பிரதான், மற்ற மாநில அரசுகளும் கேரள அரசின் முடிவை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

அதேநேரத்தில் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் குறைவாக உள்ள போதும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடுவணரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என எதிர்க்கட்சிகள் வினவியுள்ளன. இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலையில் ஒருகாசு குறைக்கப்பட்டதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். விலைக்குறைப்புக்கு பிரதமர் மோடி ஆலோசனை தந்திருந்தால் அது குழந்தைத்த்தனமானது எனவும், மலிவான ரசனை என்றும் ராகுல்காந்தி சாடியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages