தமிழகத்தை அன்புமணி ஆளவேண்டும் என்பதே மாவீரன் ஜெ.குருவின் கனவு என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார். - Agnipuratchi

தமிழகத்தை அன்புமணி ஆளவேண்டும் என்பதே மாவீரன் ஜெ.குருவின் கனவு என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.

Share This

புதுச்சேரியில் நடைபெற்ற மாவீரன் ஜெ.குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார்.  உரிய நேரத்தில் துணிச்சலான முடிவை எடுப்பதில் ஜெ.குரு வல்லவர் என அவர் புகழாரம் சூட்டினார்.  வாழ்நாள் முழுவதும் மாவீரனாகவே வாழ்ந்த ஜெ.குருவோடு பயணித்த அனுபவங்களை ஜி.கே மணி உருக்கமுடன் கூறினார். தமிழகத்தை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆள வேண்டும் என்பதே மாவீரன் ஜெ.குருவின் கனவு என்றும் ஜி.கே.மணி குறிப்பிட்டார்.

அன்புமணி ராமதாசை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க வேண்டும் என்ற மாவீரன் ஜெ.குருவின் கனவை நனவாக்க பாடுபட வேண்டும் என அவர் கட்சியினரை கேட்டுக் கொண்டார். இதேபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மறைந்த ஜெ.குருவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பொன்னுசாமி,  மாவட்ட செயலாளர் பழனிவேல் சரவணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages