இடைத்தேர்தல்களில் பாஜக அடைந்திருக்கும் தோல்வி, அந்தக் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதையே காட்டுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். - Agnipuratchi

இடைத்தேர்தல்களில் பாஜக அடைந்திருக்கும் தோல்வி, அந்தக் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதையே காட்டுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

Share This

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும், 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 2 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளை எதிர்க்கட்சிகள் கைப்பற்றின. குறிப்பாக மாநில கட்சிகளுக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இதனை அந்தந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மேள முழக்கத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.

இடைத்தேர்தல் வெற்றி பாஜகவுக்கு எதிரான இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர்சிங் கூறியுள்ளார்.

பாஜக அழிவின் விளிம்பில் உள்ளதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் இணைந்து பெற்ற இந்த வெற்றி எதிர்காலத்திலும் தொடர்வதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages