காவரியில் தமிழகத்துக்கு உரிய நீரை பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், இந்த ஆண்டும் ஜூன் மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது. இதனால் குறுவை சாகுபடி தொடர்ந்து 7வது ஆண்டாக பொய்த்துப் போயுள்ளது. காவிரிப்பாசன மாவட்டங்களில் விளைநிலங்கள் பாலைவனமாகி வருவதால், 2 ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலையை போக்க நடுவண் - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக அதிகாரமற்ற குழு அமைக்கப்பட் டால் போராட்டம் வெடிக்கும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment