காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத நடுவண் நீர்வளத்துறை செயலாளரை கைதுசெய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். - Agnipuratchi

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத நடுவண் நீர்வளத்துறை செயலாளரை கைதுசெய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Share This

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத நடுவண் நீர்வளத்துறை செயலாளரை கைதுசெய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு நடுவண் அரசு தொடர்ந்து துரோகமிழைத்து வருவ தாக சாடினார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டார். சட்டப்படி செயல்படாத நடுவண் நீர் வளத்துறை செயலாளரை கைதுசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி நிரப்புவார் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தை ஆளும் தகுதி பா.ம.க.வுக்கு மட்டுமே இருப்பதாக மருத்துவர் ராமதாஸ் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages