காவிரி பிரச்சனை தொடர்பான வரைவுத் திட்டம் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது. - Agnipuratchi

காவிரி பிரச்சனை தொடர்பான வரைவுத் திட்டம் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

Share This

காவிரி பிரச்சனை தொடர்பான வரைவுத் திட்டம் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வரைவுத் திட்டம் ஒன்றை தயாரித்து தாக்கல் செய்யுமாறு நடுவண் அரசுக்கு ஆணையிட்டது. ஆனால் அதனை செயல்படுத்தாத நடுவண் அரசு, கர்நாடக தேர்தலை காரணம் காட்டி அவகாசம் கேட்டது. இதனை ஏற்று, வரைவுத் திட்டம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அளித்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என நடுவண் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்தார். அதேநேரத்தில், வரைவுத் திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளதா என்பதை தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இதனால், காவிரி பிரச்சனையில் நடுவண் அரசு மேலும் அவகாசம் கேட்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. முன்னதாக காவிரியில் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்ற கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அதனை ஏற்க கர்நாடகா அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages