பெட்ரோல், டீசல் விலை உயர்வு - Agnipuratchi

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Share This

கர்நாடக தேர்தல் முடிந்ததையடுத்து பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.  இந்நிலையில் அங்கு வாக்குப் பதிவு முடிந்ததையடுத்து பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 69 ரூபாய் 79 காசுகள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  இதேபோல, பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஜனவரி மாதம் 62 ரூபாய் 90 காசுகளாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலையில் தற்போது 6 ரூபாய் 89 காசுகள் அதிகரித்து இருப்பது ஊர்தி ஓட்டி களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages