சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தை ஐந்து கிராம விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழி பசுமை சாலை அமைக்க நடுவண், மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இதற்காக 22 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசாங்குட்டபட்டி, குப்பனூர், மின்னாம்பள்ளி உள்ளிட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தத் திட்டத்தால் பறிபோகும் விளைநிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களையும் காண்பித்து அவர்கள் முறையிட்டனர்.
பன்னாட்டு பெருநிறுவனங்களின் நலன்களுக்காக விவசாயிகளை பலிகொடுப்ப தாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்றும் விவசாயிகள் எச்சரித்தனர்.
No comments:
Post a Comment