திருமாவளவனுக்கு பொங்கலூர் மணிகண்டன்  கண்டனம் இதுவரை யாரும் இப்படி ஒரு அறிக்கையை பார்த்து இருக்க முடியாது - Agnipuratchi

திருமாவளவனுக்கு பொங்கலூர் மணிகண்டன்  கண்டனம் இதுவரை யாரும் இப்படி ஒரு அறிக்கையை பார்த்து இருக்க முடியாது

Share This

மருத்துவர் அய்யாவின் கால் தூசிக்கு கூட  சமமாகாத  திருமாவுக்கு பொங்கலூர் மணிகண்டன் கடும்  எச்சரிக்கை
கட்டப்பஞ்சாயத்தும், கருமாதி பஞ்சாயத்து மான மலிவான வியாபார அரசியல் செய்யும் திருமா கும்பல் தலித் போர்வையில் ஒளிந்து நின்று  அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதற்காக சமூக நீதியின் தந்தை மக்கள் காவலர் மண்ணுரிமை காவலர் தமிழினப்   போராளி மருத்துவர் அய்யா அவர்களைப் பற்றி தாறுமாறாக  விமர்சித்துள்ளதை  வன்மையாக  கண்டிக்கிறேன்.
விடுதலை சிறுத்தை என்ற பெயரில் பணக்காரப்  பெண்களை குறி வைத்து பண பேரம் செய்து பிழைப்பு நடத்தும் திருமாவளவனும்  அந்த மோசடி கும்பலும் தமிழகத்தின் நாசகார சக்திகள் என்பது நாடறிந்த உண்மை.
பட்டியலின மக்கள் (தலித்) மீது அக்கறையுடையதாக காட்டிக் கொள்ளும் திருமா தனது சாதி மக்களுடன் தேவேந்திர குல மக்களும், அருந்ததிய சமுதாய மக்களும் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசுவாரா ?
அந்த மக்களும் ஏற்பார்களா? பெரும்பான்மையான சமுதாய மக்களான நாங்கள் அனைவரும் பட்டியலின மக்களுடன் இணைந்து அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில் இங்கு வன்முறையை உருவாக்கவும், அரசியல் ஆதாயம் தேடவும்  தமிழகத்தில் யோக்கிய சிகாமணி வேடம் போடும் திருமாவே குடும்பம், பண்பாடு கலாச்சாரம் காத்து வாழும்  எங்கள் அய்யா மீது  கல்லெரியும் யோக்கியதை எவனுக்கும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  மதிகெட்டுப் போய் ரத்தம் சொட்ட சொட்ட வீச்சரிவால் விளம்பரங்களை எழுதி  மதுரை வீதியில் மனம் போன போக்கில் சுற்றித் திரிந்த திருமாவளவனை கற்றறிந்த பெரியாரான மருத்துவர் அய்யா அவர்கள் வடதிசை நோக்கி அழைத்து வந்து நன்முறையில் வாழ  வன்முறையைக் கைவிட்டு அரசியல் வாழ்வு கொடுத்த அந்த அற்புதத் தலைவனை தரம் தாழ்ந்து பேசும் முன்பு  ஒரு நிமிடம் தன் மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும்.
1996 முதல் நான் அய்யா வை நெருங்கி அறிவேன். இப்போது நான் நேரடியாக கட்சிக்கு வந்து  அய்யாவுடன் மிக நெருங்கிப் பழகுகிறேன். எவர் ஒருவரையும் குறைத்து பேசும் கலாச்சாரம் அய்யாவிடம் இல்லை. அதுவும் இதில் குறிப்பாக  திருமாவைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமும் இல்லை தேவையும் இல்லை. அய்யா வை திட்டினால் தான் அரசியல் செய்ய முடியும்  என்று திருமா வேண்டுமானால் மலிவான பாதையை நாடலாம். நம்பிக்கை துரோகம் செய்தும், அதன் மூலம் அய்யா வை பலவீனப் படுத்த முனைந்தவர்கள்  பலரது நிலைமை எனக்கு தெரிந்து முகவரி இழந்தும், மரியாதை இழந்தும் நிற்கிறார்கள் என்பதே உண்மை. பலரின்  துரோகங்களை தாங்கியே பழக்கப்பட்ட எங்கள் அய்யாவுக்கு திருமா போன்றவர்களின் துரோகங்கள் எம்மாத்திரம்?
காங்கிரஸ் மீது காதல் கொண்டு கழகங்களிடம் பேரம் பேச முனையும் திருமா எந்த ஒன்றையும் புரிந்து கொள்ளமல் அல்லது திட்டமிட்டு  அய்யா மீது ஆத்திரம் கொண்டு பேசுவதில் என்ன நோக்கம் ?
எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்படாத ஒரு துறவி போல வாழ்ந்து வரும் அய்யாவைநோக்கி அனைத்து தரப்பு மக்களும் அணி வகுப்பது ஏன்?
அன்புமணி என்ற ஆட்சி நிர்வாகத்திற்கு அனைத்து தகுதிகளையும் கொண்ட தமிழகத்தின் ஏக்கத்தை  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தலைவரை பெற்றிருப்பதால் தான்.
வன்னியர்கள் மீது பரிதாபம் காட்டி வன்மத்தை வெளிப்படுத்தும் திருமாவை கேட்கிறேன்.
பாமக என்பது வன்னியர்களும் உள்ள கட்சியே தவிர வன்னியர்களுக்கான கட்சி அல்ல  என்பதை தலைமைப் பொறுப்புகளில் தொடங்கி கிராமப் பொறுப்புகள் வரை அனைத்துப் பொறுப்புகளிலும் யார் இருக்கிறார்கள் என்பதை பார்த்தாலே புரியும்.
திருமாவின் கட்சியில் 32 மாவட்டங்களிலும் உள்ள எந்த எந்த  சமுதாய மக்கள் பொறுப்புகளில் இருக்கிறார்கள்  என்பதை விளக்க முடியுமா?
வன்கொடுமை தடுப்பு சட்டத்தையே பாதுகாப்பு கவசமாக்கி பணம் பறிக்கும் ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவி ஆதிதிராவிட, அருந்ததிய பட்டியலின மக்கள் அனைவரையும் ஏமாற்றி பிழைக்கும் சில போலி தலைவர்களை மட்டுமே 81% பெரும்பான்மையான  சமுதாய மக்களும் தலைவர்களும் எதிர்க்கிறோமே ஒழிய அந்த சமுதாயங்களை அல்ல.
பட்டியலின மக்களை பாதுகாத்து அரணாக எங்கள் மருத்துவர் அய்யாவும் பாமகவும் இருப்பதால் தான் தைலாபுரம் அனைத்து சமுதாய மக்களின் சரணாலயமாக திகழ்கிறது.
தைலாபுரம் என்பது அன்போடும், பாசத்தோடும் அனைத்து சமுதாயங்களையும் அரவணைக்கும் சமூக நீதியின் பிறப்பிடமாகும். "மனித நேயப் போராளி மக்கள் காவலர் சமூக நீதியின் தந்தை "
மண்ணுரிமை காவலர் மருத்துவர் அய்யாவின் சுவாசம் பட்டால் போதும் என்று தைலாபுரத்தில் வாசம் செய்யும் எங்களை போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களை  வாஞ்சையோடு அரவணைத்து கொள்கைக் குன்றுகளாக உருவாக்கி வரும் எளிமையின் சின்னத்தை பண்பாட்டின் சிகரத்தை வாழ்வியல் போராளியை வசைபாட  " தைலாபுரத்து குள்ள நரி " என்ற வார்த்தையை அகராதித் தமிழில் அருவருப்பாய் பயன்படுத்திய திருமாவின் தரத்தை தமிழகமே உணர்ந்து கொள்ளும்.
திராவிட சூழ்ச்சியை விட்டு விலகிய கொங்கு சீமையின் தங்க தலைவன் கோவை செழியன் முதல் வன்கொடுமைச் சட்டத்தால் சமூகங்களை பிளவுபடுத்து வதை தடுத்தே தீர கால் நூற்றாண்டாய் சாதிக்  கலக அரசியலைக் கலையப் போராடியதை தானே வாழும் பெரியார் மருத்துவர் அய்யா வும்
ஆண்மையோடு பிரதிபலிக்கிறார்.
திருமாவே வேண்டாம் விபரீத வார்த்தைகள்.
தைலாபுரத்து தலைவன்  எங்கள் சமூக நீதித் தந்தை அய்யாவின் வழியில் அண்ணன் அன்புமணி அவர்களை அரியணையில் அமர்த்த அனைவரும் விரும்புகிற போது திமுக - அதிமுகவில் இடமில்லாததால் தடம் மாறுவதாக பாமக மீது பழிக்கும் திருமாவுக்கு திராணி இருந்தால் தனித்து நிற்கலாமே?
குறை சொல்வதையும், குறைத்துச் சொல்வதையும் திருமா கும்பல் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பட்டியலின மக்களைப் பாதுகாப்பதைப் பற்றி எங்கள் அய்யாவுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டாம்.
தைலாபுரம் தமிழ் மக்களின் பல்கலைக்கழகம்.
இங்கே படித்துப் ப ன்பட மட்டுமே வாய்ப்பு உண்டு.
நடித்து நாடாள முடியாது.
மருத்துவர் அய்யாவின் கால் தூசிக்கு கூட தகுதியில்லாத திருமா வார்த்தையை அளந்து பேச நகரீகத்தை முதலில்  கற்றுக் கொள்ள வேண்டும். அய்யாவின் ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்படும் பாமகவில்  இருப்பது ஒட்டு மொத்த தமிழினம் என்பதை உணர்ந்து கொள்க. இல்லாவிட்டால் தமிழகத்தில் திருமா தலை காட்டவே முடியாது என்று  எச்சரிக்கிறேன்.

பொங்கலூர் மணிகண்டன்  பா.ம.க. மாநில துணைத்தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages