மக்கள் பணியில் மாவீரன் ஜெ.குரு - Agnipuratchi

மக்கள் பணியில் மாவீரன் ஜெ.குரு

Share This

மாவீரன் என பா.ம.க தொண்டர்களால் பாசத்துடன் அழைக்கப்படும் ஜெ.குரு, 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்று அனைத்து சமூக மக்களின் பாராட்டுகளை பெற்றவர்.  அவரது மக்கள் பணி குறித்த சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்...

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு அரசியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடக்க காலம் முதல் பா.ம.க. அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் போர்க் குணத்தோடு பங்கேற்று சிறை சென்றதால், இவர் மாவீரன் என்று அழைக்கப்பட்டார்.  அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை காரணமாக பலமுறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடியவர். 2001ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியிலும் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக ஜெ.குரு ஆற்றியுள்ள சேவைகள் குறிப்பிடத்தக்கவை. ஆண்டிமடம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகளுக்கும் கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளார். பெரும்பாலான கிராமங்களுக்கு  குடிநீர் வசதி செய்து கொடுத்தது, செம்மண் சாலைகளைத் தார் சாலைகளாக மாற்றியது, உள் சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றியது என குருவின் சாதனைப் பட்டியல் மிக நீளமானது. 

ஜெயங்கொண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற போது தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத் துள்ளார். நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் பல மைல் தூரம் நடந்து செல்வதை தவிர்க்க பல பணிகளை மேற்கொண்டார். 2 கிலோ மீட்டர் தூரத் திற்குள் நியாயவிலை கடை இருக்க வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல், 51 நியாயவிலை கடைகளை தனது தொகுதிக்கு வாங்கிக் கொடுத்தவர் ஜெ.குரு. ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதி கிராமங்கள் அதிகம் நிறைந்த பகுதி. பல கிராமங்களில் பேருந்துக்காக நீண்ட நேரம் வெயிலில் கைகுழந்தைகளுடன் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்காக கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க சட்டப்பேரவையில் பல முறை குரல் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். அது மட்டுமல்ல மக்களுக்காக நவீன பேருநது நிழல் குடைகளையும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து கொடுத்துள்ளார். கிராமங்களுக்கு செல்லும் மண்சாலைகள் அனைத்தையும் தார் சாலைகளாக மாற்றித் தரக்கோரி அதிகாரிகளிடம் வாதாடி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அன்றைய கால கட்டத்தில் பல கிராமங்களுக்கு இவரது தயவினால்தான் தார் சாலைகள் போடப்பட்டன. அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு என்பது பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு கூட சரியான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனை கருத்தில் கொண்ட ஜெ.குரு, உள்ளூர் அதிகாரி களிடம் பலமுறை ஆலோசித்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். தொகுதி யில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு செய்தார். இதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவிகளை சொந்த நிதியில் வாங்கி பள்ளிகளுக்கு வழங்கினார். 

பெண்கள் நலனிலும் அக்கறை செலுத்தியவர் ஜெ.குரு. அரியலூர் மாவட்டங்களில் உள்ள மகளிர் சய உதவி குழுக்களுக்கு அரும்பணியாற்றியவர் ஜெ.குரு. வாரந் தோறும் மகளிர் கூடி ஆலோசனை நடத்தி அரசிடமிருந்து கடனுதவி பெறுவதற்கு ஏதுவாக தொகுதியில் சுய உதவி குழுக்களுக்கென கட்டடம் கட்டிக் கொடுத்தவர்  ஜெ.குரு. நடுத்தர மக்களும், ஏழை மக்களும் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியில். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளை நடத்த தனியார் மண்டபங்களை நாடிச் செல்ல முடியாத நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும்  சமுதாயக் கூடம் திறக்க முடிவு செய்தார். அதன்படி தொகுதியில் 3 ஊராட்சி ஒன்றியங்களை தேர்ந்தெடுத்து சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களின் செல வுகளை குறைத்தவர் ஜெ.குரு. ஜெயங்கொண்டம் தொகுதியில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு சுற்றுசுவர் கட்டிக் கொடுத்தார். பள்ளிக்கூடங்களில் உள்ள சத்துணவு கூடங்களுக்கு புது கட்டடம் கட்டிக் கொடுத்தார். இதேபோல் அங்கன்வாடி கட்டடங்களையும்  கட்டிக் கொடுத்தார். 

ஜெ.குரு மீது தொகுதி மக்கள் அனைவருமே எந்தவித பாகுபாடும் இன்றி அதீத பாசம் கொண்டிருந்தனர். அதற்கு பல காரணங்கள் உண்டு. ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்து ஏதேனும் திருமண அழைப்பிதழ் வந்து விட்டால் அங்கே சென்று மணமக்களை வாழ்த்தி விட்டுதான் வீடு திரும்புவார். அது மட்டுமல்ல தொகுதியில் ஒரு பிரச்சனை என்றால் முன்னின்று போராட்டம் நடத்துபவர் ஜெ.குரு. ஜெயங்கொண்டம் அனல்மின்நிலையம் அமைக்க விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவெடுத்தது. உடனடியாக போராட்ட களத்தில் குதித்த ஜெ.குரு ,தொகுதி மக்களுக்காக சிறைக்குச் சென்றார்.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages