மதுரை, தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. - Agnipuratchi

மதுரை, தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

Share This

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி, அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பலத்த இடியுடன் மழை கொட்டித் தீர்த்தது. அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், கோவிலூர், நல்ல கவுண்டன் கொட்டாய் ஆகிய பகுதிய பெய்த கனமழையால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழைகள் சாய்ந்தன. 

புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை கொட்டியது. இதேபோல மதுரை, பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages