மாவீரன் குரு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவர்களுடன் அன்புமணி ஆலோசனை
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவீரன் குரு அவர்களை சுவாசக்கருவி இல்லாமல் சுவாசிக்க வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் பயனாக அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நேற்றும், நேற்று முன்நாளும் காலையில் ஒன்றரை மணி நேரம், மாலையில் ஒன்றரை மணி நேரம் என தினமும் மொத்தம் 3 மணி நேரம் சுவாசக் கருவி இல்லாமல் மாவீரன் குரு அவர்கள் சுவாசித்தார்கள்.
மாவீரன் குரு அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து கவனித்து வருகிறார். அவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர இருதய நோய் சிகிச்சை வல்லுனர் சாய் சதீஷ், நுரையீரல் சிகிச்சைப்பிரிவு மூத்த மருத்துவர் பாபு ஆப்ரஹாம், பல்துறை தீவிர சிகிச்சைப்பிரிவின் மூத்த மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன், பல்துறை தீவிர சிகிச்சைப்பிரிவின் பொறுப்பு மருத்துவர் பரத், சிறுநீரக அறுவை சிகிச்சையியல் மருத்துவர் ஜெய கணேஷ் ஆகிய மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்படி குரு அவர்களுக்கு மருத்துவர் குழுவினர் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர் என பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment