கபினி அணையிலிருந்து 500 கன அடி உபரி நீர் மட்டுமே திறந்துவிடப் படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. - Agnipuratchi

கபினி அணையிலிருந்து 500 கன அடி உபரி நீர் மட்டுமே திறந்துவிடப் படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.

Share This

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கபினி அணையிலிருந்து, திறந்துவிடப்பட்ட உபரி நீர், 500 கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது.  இதனால் பிலிகுண்டுலுவுக்கு, வரும் நீர்வரத்து பத்தாயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 32 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், 24 ஆயிரத்து 99 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. காவிரியில் நீர்வரத்து குறைந்ததால்  விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடக அணைகளின் உபரி நீராவது குறுவை சாகுபடிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு, நீர்வரத்து சரிவு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages