மருத்துவக் கல்வி படிப்பதற்கான நுழைவு மற்றும் தகுதித் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 6ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதனை அகில இந்திய அளவில் 12 லட்சத்து 69 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவுகளை நடுவண் கல்வி வாரியம் இன்று வெளியிட்டது. அதன்படி கல்பனா என்ற பீகார் மாணவி 691 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்தார். தெலுங்கானாவைச் சேர்ந்த ரோஹன் புரோஹித் என்ற மாணவர் இரண்டாமிடமும் டெல்லியைச் சேர் ந்த ஹிமான்ஷூ என்ற மாணவர் மூன்றாமிடமும் பிடித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12ஆம் இடத்தில் வந்துள்ளார். முதல் ஐம்பது இடங்களில் இடம்பெற்ற ஒரே மாணவியும் இவர்தான். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேரில், 45 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதா வது 39 புள்ளி 55 விழுக்காட்டினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழில் தேர்வு எழுதிய 24 ஆயிரத்து 760 பேரில் ஒன்று புள்ளி எட்டு ஆறு விழுக்காட்டினரே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனிடையே, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜுலை 7 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறும் என இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment