தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த படிப்புகளில் சேருவதற்காக 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். முதலில் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னர் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டது. தற்போது அனைத்து பணிகளையும் முடித்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் தரவரிசைப் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தரவரிசைப் பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து வரும் ஜூலை 6ம் தேதி நடக்கவுள்ள ஆன்லைன் கலந்தாய்வுக்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி உள்ளது.
Home
அண்மை செய்திகள்
பி.இ., படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு- ஜூலை 6ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்
பி.இ., படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு- ஜூலை 6ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment