மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு குறித்து விஜயபாஸ்கர் - Agnipuratchi

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு குறித்து விஜயபாஸ்கர்

Share This

தமிழகத்தில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 393 மருத்துவ இடங்களில் தேசிய இட ஒதுக்கீடான 15 சதவிகிதம் போக மீதமுள்ள இடங்கள் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் அண்டை மாநில மாணவர்கள் போலி சான்றிதழ் கொடுத்து சேர்கின்றனர் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார். அப்போது தமிழக மருத்துவ இடங்களில் அண்டை மாநில மாணவர்கள் இடம்பெறாத வகையில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிரச்சனையை தமிழக அரசு கவனத்தோடு கையாண்டு வருவதாகக் கூறினார். மேலும், இருப்பிடச் சான்றிதழ் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், வழங்கப்படும் தீர்ப்பின்⚖ அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages